Today Vegetable Price: ரசம் முதல் பிரியாணி வரை இந்தியாவில் அனைத்து வகையான உணவு தயாரிப்புகளிலும் வெங்காயம், தக்காளி பயன்படுத்தப்படுவதால் இதன் தேவை மிக அதிகமாக உள்ளது.
வெங்காயம் தக்காளி சமையலுக்கு இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக ருசியை அள்ளிக்கொடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது ரசம் முதல் பிரியாணி வரை இந்தியாவில் அனைத்து வகையான உணவு தயாரிப்புகளிலும் வெங்காயம், தக்காளி பயன்படுத்தப்படுவதால் உள்நாட்டு தேவை மிக அதிகமாக உள்ளது. வெங்காயம் மற்றும் தக்காளி விலை விளைச்சல் பருவமழை மற்றும் வானிலை மாற்றங்களைப் பொறுத்து விலை அமைகிறது.
26
வரத்து அதிகரிப்பால் வெங்காயம் விலை வீழ்ச்சி
இந்நிலையில் மகாராஷ்டிராவில் வெங்காய விளைச்சல் அதிகரித்திருப்பதன் காரணமாக தினமும் லாரி லாரியாக வெங்காயம் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இதனால் வெங்காய மூட்டையுடன் லாரிகள் வரிசை கட்டி நிற்கின்றனர். வெங்காயம் வரத்து அதிகரிப்பால் விலை குறைந்து 4 கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.40 வரை விற்பனையாகிறது.
36
வேதனையில் விசாயிகள்
அதேபோல் வெங்காயத்திற்கு போட்டியாக பெட்டி பெட்டியாக தக்காளி வரத்தை அடுத்து அதன் விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.28 முதல் ரூ.30க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளியின் விலை குறைந்து ஒரு கிலோ ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனால் இல்லத்தரசிகள் பை நிறைய தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்கி செல்கின்றனர். மேலும் பச்சை காய்கறிகளின் விலையும் ஓரளவுக்கு குறைந்துள்ளது.
இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை என்பதை பார்ப்போம். பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 முதல் 35 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 70 முதல் 130 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், காலிஃபிளவர் ஒரு கிலோ 30 ரூபாய், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 முதல் 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 120 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 46 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
56
உச்சத்தில் மாங்காய் விலை
சேனைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 70 ரூபாய்க்கும், மாங்காய் 60 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 46 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 முதல் 66 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், நூக்கல் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கோவைக்காய் ஒரு கிலோ 25 முதல் 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
66
சுரைக்காய் முதல் பீட்ரூட் வரை
மேலும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 முதல் 60 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 10 முதல் 20 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 50 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 290 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 62 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.