Power Cut: மின் தடை செய்யப்படும் நேரத்தில் பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் இல்லாமலே வாழ்ந்து வந்தனர். ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் மின்சாரம் இல்லாம் சிறிது நேரம் கூட இருக்க முடிவதில்லை. தவிர்க்க முடியாத சூழல் காரணமாக கொஞ்ச நேரம் மின்தடை ஏற்பட்டாலே போதும் உடனே மின்வாரத்திற்கு போன் செய்து எப்போது கரண்ட் வரும் பொதுமக்கள் கேட்கின்றனர். அதுமட்டுமல்லாமல் தற்போது வெயில் சுட்டெரித்து வருவதால் வீட்டின் ஃபேன், ஏசி இல்லாமல் இருக்க முடிவதில்லை.
24
பராமரிப்பு பணி
இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
34
மின்சார வாரியம்
இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் வெளியிடப்படும். அதன்படி மார்ச் 8ம் தேதியான நாளை ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வேலோடை, வைரவன்குப்பம், ஏலியம்பேடு, பெரியகாவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம், கனகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே 12 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு காரணமாக மின்தடை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.