10ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று செய்முறைத்தேர்வு! எந்தெந்த நேரம்! 2ம் தேதிக்குள் ஒப்படைக்கணும்!

Published : Feb 23, 2026, 08:39 AM IST

10ம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கு செய்முறை தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதாவது அறிவியல் தேர்விற்கு 75 மதிப்பெண்களும், செய்முறைத்தேர்விற்கு 25 மதிப்பெண்களும் நிர்ணயம்.

PREV
15
10ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11 முதல் ஏப்ரல் 6 வரை நடைபெற உள்ளது. தேர்வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதனிடையே கடந்த 2011 முதல் 2012ம் கல்வியாண்டு முதல் 10ம் வகுப்பு அறிவியல் பாடத்திற்கு செய்முறை தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அதாவது அறிவியல் பாடத்தில் கருத்தியல் தேர்விற்கு 75 மதிப்பெண்களும், செய்முறைத்தேர்விற்கு 25 மதிப்பெண்களும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் இன்று முதல் வருகிற 28ம் தேதி வரை நடைபெறுகிறது.

25
அரசு தேர்வுகள் இயக்ககம்

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் முதன்மைக் கல்வி அலுவவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் பாடத்தில் கருத்தியல் தேர்விற்கு 75 மதிப்பெண்களும், செய்முறைத்தேர்விற்கு 25 மதிப்பெண்களும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

35
இன்று முதல் 28ம் தேதி வரை செய்முறை தேர்வுகள்

பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியல் மற்றும் வருகைப்பதிவு பட்டியலை ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இன்று முதல் 28ம் தேதி வரை செய்முறை தேர்வுகளை நடத்த வேண்டும்.

45
செய்முறை தேர்வு மையங்கள்

இதில், செய்முறை தேர்வு மையங்களாக செயல்படாத பள்ளிகள், தேர்வர்களின் வெற்று மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் வருகைப்பதிவு பட்டியல்களை சம்பந்தப்பட்ட செய்முறை தேர்வுமைய பள்ளி தலைமையாசிரியர்களிடம் வழங்க வேண்டும். செய்முறை தேர்வை பொறுத்தவரை இயல் அறிவியலில் உள்ள இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களை ஒரு மணிநேரத்திற்கும், உயிர் அறிவியலில் உள்ள தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களை ஒரு மணிநேரத்திற்கும் என மொத்தம் 2 மணி நேரம் நடத்த வேண்டும்.

55
காலை 9 மணி முதல் 11 மணி வரை

காலை 9 மணி முதல் 11 மணி வரையும், பிற்பகலில் 2 மணி முதல் 4 மணி வரையும் இரு வேளைகளில் நடத்தப்பட வேண்டும். இயல் அறிவியலில் 10 மதிப்பெண்கள், உயிர் அறிவியலில் 10 மதிப்பெண்கள் மற்றும் அகமதிப்பீட்டிற்கு 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். அனைத்து மாணவர்களும் அறிவியலுக்கான செய்முறை தேர்வு எழுத வேண்டும். செய்முறைத் தேர்வு முடிவுற்ற பின்னர் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து செய்முறை தேர்வுமைய பள்ளிகளிலிருந்தும் மதிப்பெண் பட்டியல்களை உரிய ஆவணங்களுடன் வருகிற 2ம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories