2015-க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. இன்றை கடைசி நாள்.!

Published : Apr 10, 2026, 10:25 AM IST

TET Exam: தமிழகத்தில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. 2015 செப்டம்பர் 1-க்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கான இத்தேர்விற்கு பணிச்சான்று அவசியம்.

PREV
15

ஆசிரியர் தகுதித் தேர்வு அல்லது TET (Teacher Eligibility Test) என்பது பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு அவசியமான ஒரு தகுதித் தேர்வாகும். தமிழகத்தில் இது TNTET (Tamil Nadu Teacher Eligibility Test) என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற கூடியவர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2015 செப்டம்பர் 1-ம் தேதி அல்லது அதற்கு முன்னர் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணி செய்து வரும் ஆசிரியர்கள் இத்தேர்வினை கட்டாயம் எழுத வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

25

தற்கான விண்ணப்பபதிவு ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 18-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

35

இதுதொடர்பாக பள்ளி கல்வி இயக்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் சுயநிதிப் பிரிவுகளில் 2015ம் ஆண்டு செப்டம்பர் 01ம் தேதி அல்லது அதற்கு முன்னர் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் பிற அதற்கு இணையான பணிநிலைகளில், காலமுறை ஊதியம், தொகுப்பூதியம் மற்றும் பகுதிநேர ஊதிய அடிப்படையில் நியமிக்கப்பட்டு பணிபுரியும் ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பு கல்வியியல் பட்டதாரி ஆசிரியர்கள் (IEDSS) ஆகியவர்களுக்கு சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் எனவும் தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி இன்று எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

45

மேற்கூறிய ஆசிரியர்கள் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க பணிச்சான்று பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியம் தெரிவிக்கப்பட்டுள்ளதால், பணிச்சான்றினை 10ம் தேதி முன்னரே வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

55

பணிச்சான்று கிடைக்கப்பெறாமலோ அல்லது தாமதமாகக் கிடைக்கப்பெற்றாலோ அதனால் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்விற்கு விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் பொறுப்பேற்க நேரிடும். எனவே இந்நிகழ்வில் தனிக்கவனம் செலுத்தி காலம் தாழ்த்தாமல் மேற்கூறிய அனைத்து ஆசிரியர்களுக்கும் உடனடியாக பணிச்சான்று வழங்குமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் . மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூலை 4 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெற உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories