தமிழக அரசின் திட்டங்கள்
தமிழக அரசு சார்பாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏழை மற்றும் எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் நிதி உதவி திட்டங்கள் மற்றும் சுய தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரின் முன்னேற்றத்திற்காகவும் பல சலுகைகள் மற்றும் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சொந்தமாக முன்னேறும் வகையில் மானிய திட்டம், நிதி உதவி திட்டம், கடனுதவி திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாற்றுத்திறனாளி தனிநபர் விபத்து நிவாரணம் – இழப்பினை பொருத்து ரூ.1,00,000 வரை உதவி தொகை வழங்கப்படுகிறது. கல்வி உதவித்தொகையாக 1000 ரூபாய் முதல் 4000 வரை வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி திட்டங்கள்
திருமண உதவித்தொகை 2000 ரூபாயும், மகப்பேறு உதவி தொகையாக 6000 ரூபாயும், மாற்றுத்திறனாளிகள் ஈமச்சடங்கு செலவிற்காக 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இது போன்ற பல்வேறு திட்டங்களுக்கு தமிழக அரசு நிதி உதவியாக செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்பவர்களுக்கும், அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்களுக்கும் ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு பரிசுகள் மற்றும் விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது சூப்பரான விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இதற்காக சிறப்பாக பணி புரிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
யாருக்கெல்லாம் விருது
சிறந்த பணியாளர்/சுயத்தொழில் புரியும் மாற்றுத்திறனாளிகள் 10 நபர்களுக்கு
பார்வைத்திறன், செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் 3 பேருக்கு
மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூக பணியாளர் ஒருவருக்கு
மாற்றுத்திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு
மாற்றுத்திறனாளிகளை அதிகளவில் பணியமர்த்திய சிறந்த நிறுவனம் ஒன்றுக்கு
மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பாக பணியாற்றிய சிறந்த ஓட்டுநர்-நடத்துனர் 2 பேருக்கு
பொதுக்கட்டங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற கட்டமைப்புகள் வழங்கிய அரசு-தனியார் 2 பேருக்கு வழங்கப்படும்.
differently abled
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
தமிழ்நாடு அரசு விருதுகளுடன் 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கமும் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்படும். இந்த விருதை வருகிற டிசம்பர்-3-2024 அன்று மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சரால் விருது வழங்கபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை https://awards.tn.gov.in/ வலைத்தளத்தில் 28-10-2024 மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொடர்புக்கு
04172-274177 எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.