கொத்து கொத்தாக இளைஞர்களுக்கு ஒரே நாளில் வேலை வாய்ப்பு.! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு

First Published | Oct 24, 2024, 7:01 AM IST

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் சேலம் மாவட்டங்களில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. பல்வேறு கல்வித் தகுதிகளை உடையவர்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் கிடைக்க உள்ளன. மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

தமிழக இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம் பெற்று வருகின்றனர். சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களும் இணைந்து நாளை (25.10.2024 வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளன. 
 

20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள்

இந்த வேலைவாய்ப்பு முகாம் சென்னை 32 கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது. இம்முகாமில் 8-ஆம் வகுப்பு, 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவில் ஏதாவது ஒரு பட்டம் (டிகிரி) ஆகிய கல்வித்தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.

இம்முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாம் வாயிலாக பணி நியமனம் பெறும் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பதிவு இரத்து செய்யப்படமாட்டாது. வேலையளிக்கும் நிறுவனங்களும். வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

job opportunities

தனியார் வேலை வாய்ப்பு முகாம்

இதே போல தமிழ்நாடு அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு பகுதியில்  தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்  வருகிற 26 ஆம் தேதி  சனிக்கிழமை காலை 9,00 மணி முதல் மாலை 3,00 மணி வரை நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சுமி பங்காரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேல்மருவத்தூர், மதுராந்தகம் வட்டத்தில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

முகாமின் சிறப்பு அம்சங்கள் :

150 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க இருப்பதாகவும். அங்கு 15,000 த்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு பதிவு வழிகாட்டுதல்கள்

இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகள்

இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் QR CODE ஐ ஸ்கேன் செய்து முன்பதிவு செய்து பயன்பெறலாம். https://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் Candidate Login-ல்  பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வி தகுதிகள்

8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங், பார்மஸி, பொறியியல்

தேவையான ஆவணங்கள்

விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக்குறிப்பு (Bio - Data) ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம்.

10ஆயிரம் காலிப்பணியிடம்

இதேபோல  சேலத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக / நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) மற்றும் பத்மவாணி மகளிர் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி வருகிற 26.10,2024 சனிக்கிழமை,  காலை 8.00 மணிமுதல் மதியம் 3.00 மணிவரை  பத்மவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெரியார் பல்கலைக்கழகம் எதிரில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முகாமின் சிறப்பு அம்சங்கள் :

200 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில் 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு

job opportunities

கல்வி தகுதிகள்

8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங் பார்மஸி, பொறியியல், ஹோட்டல் மேனேஜ்மண்ட் & ஆசிரியர் கல்வி தகுதிகள்

தேவையான ஆவணங்கள்

விருப்பம் உள்ளவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச்சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக்குறிப்பு (Bio- Data) ஆகியவற்றை முகாம் அன்று நேரில் கொண்டு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!