தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் மானிய விலையில் மானிய விலையில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. இதனால் கோடிக்கணக்கான பேர் பயனடைந்து வருகின்றனர்.
அமுதம் பிளஸ் ' எனும் பெயரில் விற்பனை செய்யப்படும் 3.8 கிலோ கிராம் எடை கொண்ட மளிகைத் தொகுப்பில் பண்டிகை காலங்களை கவனத்தில் கொண்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் 15 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய அமுதம் பிளஸ் மளிகை தொகுப்பு திட்டத்தில் வழங்கப்படுகிறது.
இதில் மஞ்சள் தூள் 50 கிராம், உப்பு 1 கிலோ, கடுகு 125 கிராம், சீரகம் 100 கிராம், வெந்தயம் 100 கிராம், சோம்பு 50 கிராம், மிளகு 50 கிராம், மிளகாய் 250 கிராம், தனியா 500 கிராம், புளி 500 கிராம், உளுத்தம் பருப்பு 500 கிராம், கடலைப் பருப்பு 200 கிராம், பாசிப்பருப்பு 200 கிராம், வறு கடலை 200 கிராம், பெருங்காயத்தூள் 15 கிராம் ஆகியவை தொகுப்பில் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் சூப்பர் அறிவிப்பு! 1000 ரூபாய் மதிப்புள்ள 10 பொருட்கள் ரூ.500 மட்டுமே! என்னென்ன இருக்கு தெரியுமா?
இந்நிலையில் ரேஷன் கடைகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரமான பொருட்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார். ஒருவேளை ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் விநியோகம் செய்யவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
மேலும் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி, துவரம் பருப்பு, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட பொருட்களை இருப்பு வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பொருள்கள் வடகிழக்கு பருவமழையால் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பாதுகாக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.