Tamilnadu Government Buses: அரசு பேருந்துகளில் அதிரடி மாற்றம்! புது பிளானோடு களத்தில் இறங்கி அசத்தல்!

First Published | Sep 6, 2024, 7:06 AM IST

TNSTC operates 2 CNG buses: டீசல் விலை உயர்வால் தமிழக போக்குவரத்துத் துறை கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், சிஎன்ஜி பேருந்துகள் மூலம் செலவுகளைக் குறைத்து வருவாய் ஈட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது.

Government bus

சென்னை போக்குவரத்து கழகம் உட்பட தமிழக முழுவதும் உள்ள 8 மண்டலங்களில் 20,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நாளொன்றுக்கு 19,296 பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் பல்வேறு விதமான வசதிகளுடன் இயக்கப்படும் நிலையில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 1.55 கோடியாக அதிகரித்து இருக்கிறது.

Tamilnadu Transport Department


 இந்நிலையிலும் டீசல் விலை இயக்க செலவுகள் போன்ற காரணங்களால் தமிழ்நாடு போக்குவரத்து துறை சுமார் 18,000 கோடி ரூபாய் கடனில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. ஒரு அரசு பேருந்தின் ஆயுட்காலமாக 12 லட்சம் கிலோமீட்டர் தூரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வயது முதிர்ந்த பேருந்துகளாக 10,000 பேருந்துகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளுக்கு மாற்றாக 8,682 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் ஜெர்மன் வளர்ச்சி வங்கி, உலக வங்கி உதவியுடன் நடப்பு நிதி ஆண்டில் 3000 டீசல் பேருந்துகள் மற்றும் 500 மின்சார பேருந்துகள் வாங்கப்பட உள்ளன. 

Tap to resize

MTC Bus

 இந்நிலையில் டீசல் பேருந்துகள் மாற்றாக மின்சாரம் மூலம் பேருந்துகளை இயக்கி செலவுகளை குறைப்பது குறித்து போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சிஎன்ஜி மூலம் இயங்கும் வகையில் பேருந்துகள் மாற்றியமைக்கப்பட்டு தற்போது 7 போக்குவரத்துக் கழகங்களில் தலா 2 பேருந்துகள் வீதம் 14 பேருந்துகள் சிஎன்ஜி மூலம் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளின் ஒரு கிலோமீட்டர் இயக்கத்திற்கு ரூ.2.61 முதல் 6.45 வரை எரிபொருளுக்கான செலவு மிச்சப்படுவதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. 

tamilnadu government bus

நாள் ஒன்றுக்கு 750 கிலோமீட்டர் வீதம் டீசல் பேருந்துகள் இயக்கப்படும் நிலையில் இந்த சிஎன்ஜி பேருந்துகளால் 750 கிலோ மீட்டர் தூரம் வரை இயங்க முடியும் என கூறும் போக்குவரத்துறை இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.3,500 சேமிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.  எனவே வரும் நாட்களில் டீசல் பேருந்துகளுக்கு மாற்றாக சிஎன்ஜி பேருந்துகளை இயக்குவது குறித்து போக்குவரத்து போக்குவரத்து துறை தீவிரம் காட்ட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் டீசலுடன் ஒப்பிடுகையில் சிஎன்ஜி பேருந்துகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் மாசும் குறைவு என்பதால் சிஎன்ஜி பேருந்துகளில் இயக்க செலவுகளை குறைப்பதுடன் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் என்கின்றனர். 

mtc bus

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை எக்ஸ் தளத்தில்: மாநகர பேருந்துகளை ஒரு லிட்டர் டீசல் மூலம் 4.76 கிமீ தூரம் இயக்க முடியும். அதன்படி ஒரு கி.மீ-க்கு ரூ.19.03 செலவாகும். இதுவே சிஎன்ஜி மூலம் 4.78 கிமீ-க்கு இயக்க முடிகிறது. இதற்கு ரூ.18.47 (ஒரு கி.மீ) செலவாகிறது. இதன் மூலம் கடந்த ஒரு மாதத்தில் ரூ.2,319 சேமிக்கப்பட்டுள்ளது.

cng Government Bus

சேலம் கோட்டத்தில் பெட்ரோல் மூலம் ஒரு கி.மீ இயக்குவதற்கு ரூ.15.80 செலவாகும் நிலையில், சிஎன்ஜி மூலம் இயக்கினால் ரூ.11.24 மட்டுமே செலவாகும். இதனால் கடந்த மாதம் மட்டும் சேலம் கோட்டத்தில் ரூ.2.08 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, கும்பகோணம், மதுரை, கோவை, விழுப்புரம் கோட்டங்களில் முறையே ரூ.1.58 லட்சம், ரூ.1.25 லட்சம், ரூ.1.58 லட்சம், ரூ.46,690, ரூ.68,064 என ஒரு மாதத்தில் மொத்தமாக ரூ.7.65 லட்சம் சேமிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Latest Videos

click me!