குரூப் 2 தேர்வர்களுக்கு! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 8 மற்றும் 23 தேதிகளில் தேர்வுகள் நடைபெறும்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 8 மற்றும் 23 தேதிகளில் தேர்வுகள் நடைபெறும்.
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் தேர்வு நடத்தப்பட்டு நிரப்பப்பட்டு வருகிறது. டிஎன்பிஎஸ்சியை பொறுத்த வரையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 என பல நிலைகளில் தேர்வு நடத்தப்படுகின்றன. குறைந்த காலி பணியிடங்கள் என்றாலும் எப்படியாவது அரசு வேலைக்கு சென்று விட வேண்டும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதுகின்றனர்.
இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணியில் சார் பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 2,540 காலி பணியிடங்களுக்காக செப்டம்பர் 14ம் தேர்வு நடைபெற்றது. இதற்கு 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5.81 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். இந்த தேர்வு நடைபெற்று 57 வேலை நாட்களில் அதாவது டிசம்பர் 12-ம் தேதி முடிவுகள் வெளியானது.
இதனையடுத்து குரூப் 2ஏ முதன்மைத் தேர்வுகள் பிப்ரவரி 8ம் தேதி காலை 9.30 முதல் 12.30 மணி வரையும், குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கான முதல் தாளாக நடத்தப்படும் தமிழ் மொழி தகுதித் தேர்வு பிப்ரவரி 8ம் தேதி மதியம் 2.30 முதல் மாலை 5.30 வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து முதன்மைத் தேர்வுக்கான இரண்டாம் தாள் பிப்ரவரி 23ம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் முதன்மைத் தேர்வில் பங்கேற்க தேர்வு கட்டணம் செலுத்துதல் தமிழ்த் தகுதித் தேர்வுக்கு விலக்குப்பெற சான்றிதழ் பதிவேற்றம் தேர்வு மையத்தை தேர்ந்தெடுப்பது ஆகியவற்றை மேற்கொள்ள தேர்வாணையம் அறிவுறுத்தியது. இந்நிலையில் குரூப் 2 தேர்வர்கள் எதிர்பார்த்த செய்தியை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 08/2024, நாள் 20.06.2024-ன் வாயிலாக ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் IIஏ பணிகள்) பணிகளுக்கான கொள்குறி வகை முதல்நிலை தேர்வு (OMR) செப்டம்பர் 14ம் தேதி நடைபெற்றது. தற்போது தேர்வாணைய பிற்சேர்க்கை 6: 080/2024, நாள் 19.12.2024-601 படி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (Group II and Group IIA Services) முதன்மைத் தேர்வு தாள் II பொது அறிவு மற்றும் பொது திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் மற்றும் மொழி (பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலம்) கொள்குறி வகை தேர்வு (OMR) பிப்ரவரி 08ம் தேதி முற்பகல், தாள் I தமிழ்மொழி தகுதித் தேர்வு (Descriptive) பிப்ரவரி 08ம் பிற்பகல் மற்றும் தொகுதி II பணிகள் (Group-II Services) பொதுஅறிவு தாள் II (Descriptive) பிப்ரவரி 23ம் தேதி நடைபெறுகிறது.
தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியீடு
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட நுழைவு சீட்டு (Hall Ticket) தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.