Published : Jan 29, 2025, 04:32 PM ISTUpdated : Jan 29, 2025, 04:41 PM IST
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், சேலைகள் மற்றும் பிற பொருட்கள் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.
ஜெயலலிதாவின் 27 கிலோ தங்க நகைகள் நிலப் பத்திரங்கள் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு! யாரிடம் தெரியுமா?
சொத்துக்குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கர்நாடகா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. நீதிபதி ஜான் மைக்கேல் குன்கா வழங்கிய தீர்ப்பை எதிர்த்து அவர்கள் பெங்களூரில் உள்ள கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.
25
ஜெயலலிதா
இதில் தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அதிரடியாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து தனி நீதிமன்றம் வழங்கிய 4 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்தது. இந்த தீர்ப்பு வருவதற்கு முன்னதாக ஜெயலலிதா மரணமடைந்தார். இதனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேர் மட்டும் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சிறை தண்டனை அனுபவித்தனர்.
35
சொத்து குவிப்பு வழக்கு
இதற்கிடையே தான் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவிடம் இருந்து ஏராளமான பட்டுப்புடடைவகள், தங்க வைர நகைகள், காலணிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பொருட்கள் அனைத்தும் பெங்களூரில் உள்ள கருவூலத்தில் உள்ளது. கடந்த 28 ஆண்டுகளாக கர்நாடகா கருவூலத்தில் உள்ள ஜெயலலிதாவின் தங்க, வைர நகைகள், 11 ஆயிரத்து 344 விலை உயர்ந்த சேலைகள், 750 ஜோடி காலணிகள், கைக்கடிகாரங்கள் ஏலம் விட வேண்டும் என கர்நாடகா ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
45
கர்நாடகா ஐகோர்ட்
இந்த வழக்கு இன்று நீதிபதி எச்.வி. மோகன் முன்பு விசாரணைக்கு வந்த போது பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதாவது 27 கிலோ தங்கம், வெள்ளி, வைர நகைகள், 1,562 ஏக்கர் நிலப் பத்திரங்கள், நகைகளை எடுத்துச் செல்ல தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையினர் 6 பெட்டிகளுடன் வர வேண்டும். உரிய வாகன வசதி, பாதுகாப்புடன் வந்து அனைத்து நகைகளையும் லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்து செல்ல வேண்டும்.
55
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை
பொருட்கள் எடுத்துச் செல்லும் போது அதனை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர்கள் இருக்க வேண்டும். ஒட்டுமொத்த நடைமுறையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்த அனைத்து நகைகளையும் பிப்ரவரி 14, 15ம் தேதியில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.