Published : Jan 29, 2025, 01:58 PM ISTUpdated : Jan 29, 2025, 02:36 PM IST
2026 சட்டமன்ற தேர்தலுக்கான தயாரிப்பில் அதிமுக தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், கட்சிப் பணிகளை கண்காணிக்க மூத்த நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஆட்டத்தை ஆரம்பித்த எடப்பாடி பழனிசாமி! சொந்த மாவட்டத்திலேயே அதிரடியை தொடங்கினார்!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து அதிமுக பல பிரிவுகளாக பிரிந்து கிடக்கிறது. அதாவது ஒபிஎஸ், டிடிவி.தினகரன், சசிகலா உள்ளிட்ட அணிகள் உள்ளன. இதனால் சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக படுதோல்வி சந்தித்தது. இந்நிலையில் வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் அதிமுகவின் வாழ்வா.? சாவா தேர்தலாக உள்ளது. எனவே இந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற என்பதால் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
25
Edappadi Palanisamy
இதனையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் தொடங்கவுள்ளார். இதற்கு முன்னதாக தொகுதி நிலவரம் தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. அந்த வகையில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக தயாராகி வரும் நிலையில், தேர்தல் பணிகளில் கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டும் எனவும், மாவட்ட செயலாளர்களை கண்காணித்து அவர்களது பணி திருப்தியாக இருக்கிறதா என்பது குறித்து அறிக்கை கொடுக்க வேண்டும் என மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, டி.ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோருக்கு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இந்த குழுவினர் மாவட்ட செயலாளர் அவர்கள் உள்ளிட்டவர்களை சந்தித்து ஆய்வு செய்து எடப்பாடி பழனிச்சாமிக்கு அறிக்கையாக அளித்தனர். அந்த வகையில் தனது சொந்த மாவட்டமான சேலத்தில் கட்சிப் பணிகள் குறித்து கள ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அதிமுக அமைப்பு செயலாளர் சிங்காரத்தை எடப்பாடி பழனிச்சாமி நியமித்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் அவர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட செயலாளர் பதவி வெங்கடாசலத்தின் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
45
AIADMK
இதுகுறித்து முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்த வெங்கடாஜலத்தை இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, சேலம் மாநகர் மாவட்ட கழக பணிகளை மேற்கொள்வதற்காக புதிய பொறுப்பாளர்களாக அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் எம்.கே.செல்வராஜ், சூரமங்கலம் பகுதி-2 கழக செயலாளராக இருந்த ஏ.கே.எஸ்.எம்.பாலு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் அமைப்பு ரீதியாக அதிமுகவில் மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்டம் என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இதில் சேலம் மாநகர் மாவட்ட செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ., வெங்கடாஜலம் பதவி வகித்து வந்தார். இவரை மறைந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மாநகர் மாவட்ட செயலாளராக அறிவித்தார். இதையடுத்து வெங்கடாஜலம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் அதாவது 8 ஆண்டுகளாக மாநகர் மாவட்ட செயலாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் மாநகர் மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அதற்கு பதிலாக புதிய பொறுப்பாளர்களாக 2 பேர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.