விநாயகர் சதுர்த்தி விழா! கண்டிப்பாக இதையெல்லாம் செய்யவே கூடாது! மாசு கட்டுப்பாடு வாரியம் அதிரடி சரவெடி!

Published : Aug 09, 2025, 06:50 AM IST

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. சிலைகள் கரைப்பதற்கான வழிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து விரிவாக இந்த செய்தியில் காணலாம்.

PREV
14
மாசு கட்டுப்பாடு வாரியம்

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு வருகிற 27-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் தமிழகத்திற்கு நீண்ட கால பாரம்பரியம் உள்ளது. விநாயகர் சதுர்த்தி, தெய்வீகத்தின் கொண்டாட்டம் மட்டுமல்ல, நமது சுற்றுச்சூழலின் அழகையும் தூய்மையையும் பாதுகாப்பதற்கான நமது உறுதிப்பாட்டை நிரூபிக்க ஒரு வாய்ப்பாகும். மேலும் மாவட்ட நிர்வாகத்தால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டும் மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிலைகளை கரைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

24
விநாயகர் சதுர்த்தி விழா-செய்ய வேண்டியவை

சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகளைப் பயன்படுத்துங்கள். சிலைகளுக்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர் சார்ந்த, இயற்கையாக மக்கக்கூடிய  மற்றும் நச்சுத்தன்மையற்ற இயற்கை சாயங்களைப் பயன்படுத்துங்கள். சுற்றுசூழலிற்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் துணிகளை பூஜை பொருட்களாக பயன்படுத்தவும். அகற்றி துவைத்து மீண்டும் உபயோகிக்ககூடிய அலங்கார துணிகளையே அலங்காரத்திற்கு பயன்படுத்தவும். பிரசாத விநியோகத்திற்கு மக்கும் / மீண்டும் பயன்படுத்தக்கூடிய தட்டுகள் மற்றும் கண்ணாடி கோப்பைகளை பயன்படுத்தவும். பொறுப்புடன் குப்பைகளை பிரித்து  அப்புறப்படுத்துங்கள். அறிவிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். எல்.இ.டி. பல்புகள் போன்ற சுற்றுசூழலிற்கு உகந்த விளக்குகளை பயன்படுத்தவும். அலங்கார பொருட்களை எதிர்கால பண்டிகைகளுக்கு சேமித்து பயன்படுத்தவும்.

34
விநாயகர் சதுர்த்தி விழா- செய்யக்கூடாதவை

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP) சிலைகளைப் பயன்படுத்த கூடாது. சிலைகளை அலங்கரிப்பதற்கு, சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக், தெர்மாகோல் மற்றும் இரசாயனங்களை பொருட்கள் அல்லது சாயங்களை பயன்படுத்த கூடாது. சிலைகளின் மேல் பூசிற்கும் அலங்காரத்திற்கும் நச்சுத்தன்மையுள்ள மற்றும் மக்கும் தண்மையற்ற இரசாயனசாயங்கள் / எண்ணெய் வண்ணப் பூச்சுகளை பயன்படுத்த கூடாது.

44
ஃபிலமென்ட் பல்புகளை விளக்குகளாக பயன்படுத்த கூடாது

சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒருமுறை உபயோகித்து தூக்கியெறிப்படும் பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோலாலான பொருட்களை பூஜை பொருட்களாக பயன்படுத்த கூடாது. வண்ணப் பூச்சுகள் மற்றும் பிற நச்சு இரசாயனங்கள் கொண்ட ஒரு முறையே உபயோகித்து தூக்கியெறியகூடிய அலங்கார பொருட்களை பயன்படுத்த கூடாது. பண்டிகையின்போது ஒரு முறை பயன்படுத்தி தூக்கியெறியகூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் மற்றும் உறிஞ்சு குழாய்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். குப்பை மற்றும் கழிவுகளை பொறுப்பற்று கொட்ட கூடாது. அனுமதி இல்லாத நீர் நிலைகளில் சிலைகளை கரைக்க கூடாது. ஃபிலமென்ட் பல்புகளை விளக்குகளாக பயன்படுத்த கூடாது. ஒற்றை உபயோக அலங்கார பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories