இதுவரை, விவேகானந்தர் பாறைக்குச் செல்ல சுற்றுலாப் பயணிகள் படகு டிக்கெட்டுகளைப் பெறுவதற்கு நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. இதனால் பலர் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர், சிலர் டிக்கெட் கிடைக்காமல் பயணம் செய்யாமலேயே திரும்பினர்.
இந்தச் சூழலில், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இன்று முதல், https://www.psckfs.tn.gov.in என்ற இணையதள முகவரியில் படகுப் பயணத்திற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளலாம்.