சினிமாவை மிஞ்சிய த்ரில்லிங்! 17 ஆண்டுகள் காத்திருந்து அதிமுக பிரமுகர் கொ**! கல்லூரி மாணவனின் பகீர் தகவல்!

Published : Aug 08, 2025, 11:53 AM IST

சென்னையில், 2 வயது சிறுவனாக இருந்தபோது தந்தையை கொலை செய்த ரவுடியை 17 ஆண்டுகள் கழித்து மகன் பழிக்குப்பழி வாங்கியுள்ளார். 2008-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி செந்திலின் மகன், தந்தையின் கொலைக்காக 17 ஆண்டுகள் காத்திருந்து இந்த கொலை.

PREV
14
அதிமுக பிரமுகர் ராஜ்குமார்

சென்னையில், சினிமாவை மிஞ்சும் வகையில் 2 வயது சிறுவனாக இருந்தபோது, தந்தையை கொலை செய்த ரவுடியை 17 ஆண்டுகள் கழித்து பழிக்குப்பழி வாங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. சென்னை டி.பி.சத்திரம் ஜோதி அம்மாள் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(42). பிரபல ரவுடி இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக எந்த வம்புக்கும் போகாமல் திருந்தி வாழ்ந்து வந்தார். அதிமுக பிரமுகரான இவர் திருமண நிகழ்ச்சிக்கு பந்தல் மற்றும் அலங்காரம் செய்யும் தொழில் செய்துள்ளார்.

24
வெட்டி படுகொலை

இவருக்கு திருமணமாகி கலைச்செல்வி என்ற மனைவி, 2 மகள்கள் உள்ளனர். நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி அளவில் ராஜ்குமார் வீட்டில் தனியாக இருந்தபோது பைக்குகளில் பயங்கர ஆயுதங்களுடன் வந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் மனைவி மற்றும் குழந்தைக்காக என்னை விட்டு விடுங்கள் என்று கெஞ்சியும் கேட்காமல் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்தனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்த உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ராஜ்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

34
போலீ1் விசாரணையில் அதிர்ச்சி

இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விசாரணையில் 2008-ம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பிரபல ரவுடி செந்திலின் மகன் தந்தையின் கொலைக்காக 17 ஆண்டுகள் காத்திருந்து பழிக்கு பழி வாங்கியது தெரியவந்துள்ளது.  ரவுடி செந்திலின் கொலை வழக்கில் தொடர்புடையதாக கூறப்படும் பிரபல ரவுடி தீச்சட்டி முருகன், ஜெயராஜ் மற்றும் பைனான்சியர் ஆறுமுகம், பிரான்சிஸ், குள்ள சுரேஷ், ராஜ்குமார் ஆகியோர் செந்தில் கொலை வழக்கில் தொடர்புடையவர்கள். இதில் தீச்சட்டி முருகன், ஜெயராஜ் மற்றும் பைனான்சியர் ஆறுமுகம் ஆகியோர் பல பிரச்னைகளில் முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டனர். இதில் பிரான்சிஸ் சில ஆண்டுகளுக்கு முன் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். மீதம் குள்ள சுரேஷ், ராஜ்குமார் ஆகிய இருவர் மட்டுமே உயிருடன் இருந்தனர்.

44
தீவிர தேடுதல் வேட்டை

செந்தில் மகன் கீழ்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து வருகிறார். இவர் தந்தையை கொன்றவர்களை பழிவாங்க வேண்டும் என்று காத்திருந்துள்ளார். இதற்காக தனது கல்லூரி நண்பர்கள் மற்றும் வெளியாட்கள் என 10 பேருடன் சென்று ரவுடி ராஜ்குமாரை வெட்டி கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக செந்திலின் மகன் யுவனேஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். இதுசம்பந்தமாக கல்லூரி மாணவர் இஸ்ரவேல் டி.பி சத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். தலைமறைவாக உள்ள 7 பேரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories