கும்பாபிஷேகம் நடைபெற்று சில நாட்களே ஆவதால் இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இதனால் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகையால் முருகனை தரிசனம் செய்யவே கிட்டத்தட்ட 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர். அதுவும் வார விடுமுறை மற்றும் விஷசே நாட்கள் வந்துவிட்டால் கூட்டம் அலைமோதும். மேலும், அரசியல் பிரபலங்கள், நடிகர், நடிகைகள் அவ்வப்போது திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.