தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் மாணவர்கள் இதற்காக தீவிரமாக தயாராக வருகின்றனர். இதனிடையே தமிழகத்தில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு ஒரு வருடம் 3 பருவங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பருவத்திற்கும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன. காலாண்டு, அரையாண்டு, முழுஆண்டு என 3 பருவங்களாக பள்ளிகள் நடைபெறுகின்றன.