10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத்தினால் தயார் செய்யப்பட்ட வினா வங்கி, தீர்வு புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது. இதில், 10ம் வகுப்பு கணிதத்தீர்வு புத்தகத்தில் குறிக்கோள் வினாக்கள் உள்பட சுமார் 800க்கும் மேற்பட்ட பயிற்சி கணக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதால், இது மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதப் பாடவரிசைக்கு கணிதத் தீர்வு புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கில வழிகளில் தயாரிக்கப்பட்டுள்ளது.
புத்தகத்தின் சிறப்பம்சம்கள்:
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைவராகக் கொண்டு பேராசிரியர் அன்பழகன் பள்ளிக்கல்வி இயக்கக வளாகத்தில் இயங்கும் தமிழ்நாடு மாநிலப் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் சிறந்த பாடவல்லுநர்களைக் கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பத்தாம் வகுப்பிற்கு 3 புத்தகமும், 12ம் வகுப்பிற்கு 8 புத்தகமும் ஆக மொத்தம் கீழ்க்கண்ட 11 புத்தகங்களை அச்சிட்டு தமிழகம் முழுவதும் மாவட்ட விற்பனை மையங்களில் (பள்ளிகள்) விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாங்கி பயன்பெறுவீர்.
விலை பட்டியல்
10ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு ரூ.120 (தமிழ் மற்றும் ஆங்கில வழி), 10ம் வகுப்பு கணித தீர்வு புத்தகம் ரூ.175 (ஆங்கில வழி), 10ம் வகுப்பு கணித தீர்வு புத்தகம் ரூ.175 (தமிழ் வழி), 12ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு அறிவியல் பாடப்பிரிவு (தமிழ் மற்றும் ஆங்கில வழி) ரூ.140, 12ம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு கலைப் பாடப்பிரிவு (தமிழ் மற்றும் ஆங்கில வழி) ரூ.140, 12ம் வகுப்பு கணித தீர்வு புத்தகம் (ஆங்கில வழி) ரூ.160, 12ம் வகுப்பு கணித தீர்வு புத்தகம் (தமிழ் வழி) ரூ.160, 12ம் வகுப்பு கணித COME புத்தகம் (தமிழ் வழி) ரூ.160, 12ம் வகுப்பு கணித COME புத்தகம் (ஆங்கில வழி) ரூ.160, 12ம் வகுப்பு இயற்பியல் தீர்வு புத்தகம் (ஆங்கில வழி) ரூ.70, 12ம் வகுப்பு இயற்பியல் தீர்வு புத்தகம்(தமிழ் வழி) ரூ.70 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.