மாணவர்களின் படிப்பில் முக்கிய கட்டமாக இருப்பது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வாகும். அந்த வகையில் மாணவர்கள் தேர்வுக்காக இரவும் பகலாக படிப்பார்கள். பல பள்ளிகளில் சிறப்பு வகுப்புகளும் நடத்தப்படும். எனவே அந்த வகையில் தமிழகத்தில் பொறுத்தவரை 10 வது மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை பல லட்சம் மாணவர்கள் எழுதவுள்ளனர். தமிழக அரசின் கல்வி திட்டத்தின் படி பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளது. அந்த வகையில் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கவுள்ளது.
CBSE Board Exam CCTV Mandatory
இந்த தேர்வானது மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல 10ஆம் பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி தொடங்க இருப்பதாகவும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் பள்ளக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்தநிலையில் மத்திய அரசின் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு 10 வது மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
school exam
அதன் படி சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வை நாடு முழுவதும் சுமார் 44 லட்சம் பேர் எழுத உள்ளனர். இந்த தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது. சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பிப்ரவரி 15ம் தேதி தொழிற்கல்வி பாடத்தோடு முதல் தேர்வு நடைபெற உள்ளது. இதனையடுத்து பிப்ரவரி 21 ஆம் தேதி இயற்பியல் தேர்வும், பிப்ரவரி 24ஆம் தேதி புவியியல் தேர்வும் நடைபெறவுள்ளது. பிப்ரவரி 27 ஆம் தேதி வேதியியல் தேர்வுகள் நடக்க உள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
school exam
10ம் வகுப்பு தேர்வானது பிப்ரவரி 15ம் தேதி ஆங்கிலம், பிப்ரவரி 20ஆம் தேதியில் அறிவியல் தேர்வுகள் நடைபெறவுள்ளது. பிப்ரவரி மாதம் 27 ம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகள் நெடைபெறுகிறது. மார்ச் 10ம் தேதி கணிதம தேர்வும் மார்ச் 13ம் தேதி ஹோம் சயின்ஸ் தேர்வுகள் நடைபெற இருப்பதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் விபரங்களை மாணவ-மாணவிகள் www.cbse.gov.in இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.