கலைமாமணி விருது வென்றவர்கள் யார்... யார்?
பாரதியார் விருது (இயல்) - முனைவர் ந. முருகேச பாண்டியன்
எம்.எஸ். சுப்புலட்சுமி விருது (இசை) - பத்மபூஷன் டாக்டர் கே.ஜே. யேசுதாஸ்
பாலசரசுவதி விருது (நாட்டியம்) - பத்மஸ்ரீ முத்துகண்ணம்மாள்
அகில இந்திய விருது பெறும் கலை வித்தர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகைக்கான காசோலையுடன், 3 சவரன் எடையுள்ள தங்கப் பதக்கம் வழங்கப்படும்.
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்படும் சிறந்த கலை நிறுவனத்திற்கான கேடயம் மற்றும் சிறந்த நாடகக்குழுவிற்கான சுழற் கேடயம் பெறுவதற்குரிய கலை நிறுவனம் மற்றும் நாடகக் குழு கீழ்கண்டவாறு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த கலை நிறுவனம்- தமிழ் இசைச் சங்கம், சென்னை (ராஜா அண்ணாமலை மன்றம்)
சிறந்த நாடகக் குழு - கலைமாமணி எம்.ஆர். முத்துசாமி நினைவு நாடக மன்றம், பாலமேடு, மதுரை மாவட்டம்.
சிறந்த கலை நிறுவனத்திற்கு வழங்கப்படும் கேடயம் மற்றும் சிறந்த நாடகக் குழுவிற்கு வழங்கப்படும் சுழற் கேடயத்துடன் தலா ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அடுத்த மாதம் சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும் விழாவில், 2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள், அகில இந்திய விருதுகள், சிறந்த கலை குழுவினருக்கான கேடயங்கள் வழங்கி சிறப்பிக்கப்படும்.