பெண்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை வழங்கும் சூப்பர் திட்டம் - உடனே விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு

Published : Oct 20, 2024, 07:55 AM IST

தமிழகத்தில் பெண்கள் பொருளாதார ரீதியாக தன்னிறைவு அடையும் நோக்கில் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் ரூ.50,000 உதவித்தொகையை பெற உடனே விண்ணப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

PREV
15
பெண்களுக்கு ரூ.50,000 உதவித்தொகை வழங்கும் சூப்பர் திட்டம் - உடனே விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு
Women Welfare Scheme

தமிழக அரசின் சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழகத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், முதிர்கன்னிகள் உள்ளிட்டோர் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை களைந்து அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியம் கடந்த 2022ம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

25
Women Welfare Scheme

200 பயனாளிகள்

இது தொடர்பாக கடந்த ஜூன் 21ம் தேதி சட்ட சபையில் சமூக நலத்துறை வெளியிட்ட அறிவிப்பில், “கைம்பெண்கள், நலவாரியத்தில் பதிவு செய்த கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்ற, நலிவுற்ற பெண்கள், பேரிளம் பெண்களில் இருந்து வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 200 பயனாளிகளுக்கு, நடமாடும் உணவகங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், சிற்றுண்டி கடைகள், நடமாடும் பழச்சாறு கடைகள், சலவைக்கடைகள் போன்ற சுயதொழில் செய்ய, நலவாரியம் மூலம் ஒரு பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் வீதம் 200 பயனாளிகளுக்கு ரூ.1 கோடி செலவில் மானியம் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

35
Women Welfare Scheme

ரூ.1 கோடி மானியம்

இதையடுத்து சமூக நலஆணையர், ஆதரவற்ற மகளிர் நலவாரிய வங்கிக் கணக்கில் ரூ.1.61 கோடி இருப்பதாகவும், இதில் மானியம் வழங்க தேவைப்படும் ரூ.1 கோடியை செலவு செய்ய அனுமதியளிக்க கோரியதுடன், மானியம் பெறுவதற்கான தகுதியையும் நிர்ணயித்து அரசுக்கு கடிதம் அனுப்பினார். கடிதத்தை பரிசீலித்த தமிழக அரசு ரூ.1 கோடி மானியம் வழங்க ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளது.

45
Women Welfare Scheme

குடும்ப ஆண்டு வருமானம்

இந்த மானியத்தை பெற, வாரியத்தில் பதிவு செய்து உறுப்பினராக இருக்க வேண்டும். வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். 25 முதல் 45 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒருவர் ஒருமுறை மட்டும் மானியம் பெற தகுதி உடையவராவர்.

55
Women Welfare Scheme

தகுதியானவர்கள்

மானியத்தைப் பெற விண்ணப்பத்துடன், கைம்பெண், கணவனால் கைவிடப்பட்டவர், நலிவுற்றவர், ஆதரவற்றவர் மற்றும் பேரிளம்பெண் என்பதற்கான சுய அறிவிப்பு சான்று, வருவாய் சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், தற்போதைய வசிப்பிட முகவரிக்கான சான்று ஆகியவற்றை இணைத்து மாவட்ட சமூக நல அலுவலரிடம் வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories