60ஆயிரம் மதிப்பில் மாங்கல்யம், கட்டில், மெத்தை சீர் வரிசையோடு கோயிலில் இலவச திருமணம்.! விண்ணப்பிப்பது எப்படி.?

First Published | Oct 20, 2024, 7:47 AM IST

தமிழக அரசு, திருக்கோயில்கள் சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு இலவச திருமணங்களை நடத்தி வருகிறது. 4 கிராம் தங்கம் உட்பட ரூ.60,000 மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தில் இணையಲು தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை இங்கே.

Marriage

தமிழக அரசின் திருமண உதவி திட்டம்

தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதோடு, ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காகவும், சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதில் ஒரு திட்டம் தான் திருமண உதவி திட்டம்.படித்த பட்டதாரி பெண்களுக்கு 50ஆயிர்ம நிதி உதவி மற்றும் 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. படிக்காத பெண்களுக்கு 25ஆயிரம் ரூபாய் உதவி தொகையும், 8 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்த திட்டமானது  டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம், ஈ.வி.ஆர். மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டம்: அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டம்: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

marriage

கோயிலில் சீர்வரிசையோடு திருமணம்

இதே போல மற்றோரு திருமண உதவித்திட்டம் தான் அறநிலையத்துறை சார்பாக சீர்வரிசையோடு கோயில்களில் திருமணம் நடத்தப்படுகிறுத. பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பில் கட்டணமில்லாமல் திருமணம் செய்து வைக்கப்பட்டு சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 2022 2023 ஆம் ஆண்டில் 500 இணைகளுக்கும், 2023- 2024 ஆம் ஆண்டில் 600 இணைகளுக்கும் என 1.100 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற மானியக்கோரிக்கையில் "பொருளாதாரத்தில் பின்தங்கிய 700 இணைகளுக்கு திருக்கோயில்கள் சார்பாக 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.60,000/- மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்" என அறிவிக்கப்பட்டது.  
 

Tap to resize

marriage

60ஆயிரம் மதிப்பில் சீரவரிசை

இதனையடுத்து முதற்கட்டமாக சென்னை, திருவான்மியூரில் 21.10.2024 அன்று தமிழ்நாடு முதலமைச்சர்  31 இணைகளுக்கு மங்கல நாண் எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைப்பதோடு சீர்வரிசைப் பொருட்களையும் வழங்க உள்ளார். அதேநாளில் தமிழகம் முழுவதும் 304 இணைகளுக்கு திருமணங்கள் நடைபெறவுள்ளன.தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை மண்டல திருக்கோயில்கள் சார்பில் நடைபெற உள்ள திருமண விழாவில் பங்கேற்கும் 31 மணமக்களுக்கு அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பட்டு வேட்டி, சட்டை, துண்டு மற்றும் பட்டு புடவைகளை வழங்கினார். இதனிடையே ஒரு ரூபாய் செலவு இல்லாமல் இந்த திட்டத்தில் ஏழை, எளிய மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். எனவே இந்த திட்டத்தில் எப்படி இணையலாம் யாருக்கெல்லாம் தகுதி உள்ளது என்பதை தற்போது பார்க்கலாம்.

Marriage

சீர்வரிசை பொருட்கள் என்ன தெரியுமா.?

தமிழக அறிநிலயைத்துறை சார்பாக கோயில்கள் தேர்வு செய்யப்பட்டு இலவச திருமணங்கள் நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு மொத்தமாக 60ஆயிரம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசைப்பொருட்கள் வழங்கப்படுகிறது. தற்போது தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் 25ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 4 கிராம் தங்கம், 3ஆயிரம் மதிப்பிலான மணமக்கள் ஆடை, திருமணத்திற்கு வரும் உறவினர்களுக்கு 20 நபர்களுக்கு ருசியான உணவு, கல்யாணத்திற்கு தேவையான மாலை மற்றும் மலர்கள்,7,800 ரூபாய் மதிப்பிலான பீரோ, ,  கட்டில்-ஒன்று  7,500 ரூபாய், மெத்தை : 2,200 ரூபாய்,  தலையணை-2 : 190 ரூபாய், பாய்-ஒன்று 180 ரூபாய், ஆயிரம் ருபாய் மதிப்பிலான 2 கைக்கடிகாரம்-2,  மிக்ஸி,  பூஜை பொருட்கள் மற்றும்  4 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பாத்திரங்கள் என ஒட்டுமொத்தமாக 60ஆயிரம் ரூபாய் செலவில் திருமணங்கள் நடத்தி வைக்கப்படுகிறது.

tamilnadu

விண்ணப்பிப்பது எப்படி.?

இந்த திட்டத்தின் கீழ் திருமணம் செய்ய தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கோவில்களில் குறைந்தது 21 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பம் கொடுக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தோடு  முதலாவதாக முதல் திருமண செய்கிறார் என்ற சான்றிதழ் வழங்க வேண்டும்,  தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது எட்டிய பெண்ணும்.  21 வயதுடைய ஆணும் இந்த திட்டத்திற்காக விண்ணப்பிக்கலாம். வருமான சான்றிதழ் வழங்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு 72 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். மேலும் எந்த பகுதியில் வசிக்கிறார்கள் என்பதற்கு சான்றாக காவல்துறையின் சான்றிதழ் வழங்க வேண்டும். அடுத்ததாக ஆதார் கார்டு மற்றும் கல்வி சான்றிதழ் வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
 

Latest Videos

click me!