தமிழகத்தில் அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதற்காக அரசு அவ்வப்போது பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி ஆசிரியர்கள் வருகை பதிவு செய்ய பயோமெட்ரிக் முறையை அறிமுகத்தியது. பின்னர் மதிய உணவுக்காக ஆசிரியர்கள் வெளியில் செல்ல அனுமதிக்கக்கூடாது உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்தது.