5 நாள் தான் உங்களுக்கு அவகாசம்; தளபதி விஜய்க்கு வைக்கப்பட்ட செக் - என்ன நடந்தது?

First Published Oct 19, 2024, 9:04 PM IST

TVK Vijay : தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பேரிடி கொடுக்கும் செய்தியாக தற்பொழுது ஒரு தகவல் வெளியாகி மிகப்பெரிய அளவில் பரபரப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

Tamilaga vettrikazhagam

வருகின்ற 2026ம் ஆண்டு நடக்க உள்ள சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் சார்பாக, தளபதி விஜய் முதல்வர் வேட்பாளராக களம் இறங்கவிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் தன்னுடைய சினிமா பயணத்தையும் வருகின்ற 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவு செய்யும் அவர், இப்பொது தனது சினிமா பணிகளை கவனிக்கும் அதே நேரம், தொடர்ச்சியாக தன்னுடைய கட்சி பணிகளையும் தீவிரமாக கவனித்து வருகிறார். அண்மையில் அவருடைய கட்சியின் கொடி வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

"சுள்ளான்கள் எல்லாம் அடுத்த MGRனு சொன்னா எப்படி? விஜயை மறைமுகமாக தாக்கினாரா ராஜேந்திர பாலாஜி?

TVK Vijay

தொடர்ச்சியாக தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்த ஆயத்தமான விஜய், முதலில் அதை திருச்சியில் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், பல சவால்களுக்கு பிறகு வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள ஒரு இடத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதில் அக்கட்சியை சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் நேரில் வந்து கலந்துகொள்ள வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் கடுமையான பல விதிமுறைகளை தங்களுடைய கட்சி உறுப்பினர்களுக்கு விதித்திருக்கிறது த.வெ.க என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos


TVK Leader

இந்த சூழலில் பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் தளபதி விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு மிகப்பெரிய வரவேற்பு தந்து வரும் நிலையில், சில கட்சி தலைவர்கள் தளபதியின் அரசியல் வருகையை பெரிய அளவில் விமர்சித்து வருகின்றனர். அதேபோல அவருடைய கட்சி கொடி வெளியான நாளிலிருந்து பல சர்ச்சைகளை எதிர் கொண்டு வருகிறது. இந்த சூழலில் பகுஜன் சமாஜ் கட்சி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

Bahujan Samaj

அதாவது பகுஜன் சமாஜ் கட்சியின் வழக்கறிஞர் மற்றும் மாநில துணைத் தலைவர் சந்தீப் இப்பொழுது தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜய்க்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் எதிர்வரும் 5 நாட்களுக்குள் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியில் உள்ள யானை சின்னத்தை நீக்கிவிட வேண்டும் என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருக்கிறது. அப்படி அதை நீக்காவிட்டால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அக்கட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு நல்ல செய்தி: அமைச்சர் அன்பில் மககேஸ் கொடுத்த அப்டேட்

click me!