அப்பாவை போல அடுத்த டார்கெட் நான் தான்! நெல்லை ஜாகீர் உசேன் மகன் பகீர் வீடியோ!
நெல்லை ஜாகிர் உசேன் கொலை வழக்கில் குற்றவாளிகள் சரணடைந்த நிலையில், அடுத்த இலக்கு நான் தான் என அவரது மகன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
நெல்லை ஜாகிர் உசேன் கொலை வழக்கில் குற்றவாளிகள் சரணடைந்த நிலையில், அடுத்த இலக்கு நான் தான் என அவரது மகன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
நெல்லை டவுன் தொட்டிப்பாலத் தெருவை சேர்ந்தவரும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரியாக பணியாற்றிய, ஓய்வு பெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் ஜாகிர் உசேன் பிஜிலி(60) கடந்த 18ம் தேதி அதிகாலை படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இக்கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய கார்த்திக், அக்பர்ஷா ஆகியோர் நெல்லை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ரெட்டியார்பட்டி பகுதியில் பதுங்கியிருந்த கிருஷ்ணமூர்த்தி என்ற முகமது தவுபிக்கை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி நூர் நிஷா தலைமறைவாக உள்ளார். மேலும் யாரும் எதிர்பாராத விதமாக வேவு பார்த்ததாக 11ம் வகுப்பு மாணவர் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: கருணாநிதியின் தனிப்பிரிவு அதிகாரி வெட்டிப் படுகொலை! யார் இந்த ஜாகீர் உசேன்?
இந்நிலையில், கொலை செய்யப்பட்ட ஜாகிர் உசேன் மகன் இஜூர் ரஹ்மான் பிஜிலி அடுத்த டார்கெட் நான் என வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை எற்படுத்தியுள்ளார். அதில் அப்பாவுக்கு பிறகு அடுத்த டார்கெட் நான் தான். மர்ம நபர்களால் நாங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறோம். ஹெல்மெட் போட்டுக்கொண்டு இருசக்கர வாகனத்தில் எனது வீட்டு முன்பு வந்து வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். நான் வீட்டு வெளியே சென்று பார்த்தபோது சென்றுவிட்டார்.
நான் சாவுக்கு பயப்படவில்லை, அதற்கு பிறகு உள்ள பொறுப்பை நினைத்தே பயப்படுகிறோம். எஃப்ஐஆர் பதிவு செய்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. ஆனால் நான்காவது குற்றவாளியான நூர் நிஷாவை பிடிக்க முடியவில்லை. வெளியில் இருந்தால் ஜாமீன் பெறுவதற்கும், சாட்சிங்களை கலைப்பதற்கும் முயல்வார். அவரை எப்போது கைது செய்யப்போகிறீர்கள்? உடலை வாங்க மாட்டோம் என நிபந்தனை விதித்ததாலேயே முக்கிய குற்றவாளியான கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தார்கள். குற்றவாளிகளை காப்பாற்ற நினைக்க வேண்டாம். அது அரசுக்குத்தான் அசிங்கத்தை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தில் கோபால கிருஷ்ணன், உதவி ஆணையர் செந்தில் குமார் டிஸ்மிஸ் செய்யுங்கள். இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து, இவரது வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.