தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அக்டோபர் 19-22 வரை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை, இடியுடன் கூடிய மின்னல், லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு வானிலை
சென்னையுடன் சேர்ந்து புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் இதே நிலை நிலவவுள்ளது. கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தீபாவளி தினத்தில் மழை கொட்டும்
அக்டோபர் 20, தீபாவளி தினத்திலும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய லேசனானது முதல் மிதமானது மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர் மலைப்பகுதிகள், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது.