விஜய் தான் குற்றவாளி..! கூட்டம் சேர்க்கும் வெறியில் தற்குறித்தனம்... முடிவுக்கு வந்த திமுக ஐடி.விங்

Published : Oct 19, 2025, 06:55 AM IST

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தவெக பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்து 20 நாட்கள் ஆகியும், அக்கட்சித் தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்திக்கவில்லை. இதுகுறித்து திமுக ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது.

PREV
15
விஜய் குறித்து திமுக ஐடி விங்

கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த தமிழக வெற்றிக் (தவெக) பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர் இன்று மாநிலத்தையே உலுக்கிக் கொண்ட. அந்த துயர சம்பவம் செப்டம்பர் 27ஆம் தேதி நடந்தது. இன்று வரை 20 நாட்கள் கடந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை நடிகரும் தவெக தலைவருமான விஜய் நேரில் சென்று சந்திக்காதது குறித்து சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

25
மக்களை சந்திக்காத விஜய்

அந்த துயரத்துக்குப் பின், முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உடனடியாக குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினர். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனும் நேரில் சென்றார். ஆனால், விஜயின் வருகை குறித்து எந்த முன்னேற்றமும் இதுவரை இல்லை. ஆரம்பத்தில் அவர் கரூருக்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திக்கத் திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இதற்காக காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டு, கரூர்-ஈரோடு சாலையில் உள்ள கேஆர்வி மெரிடியன் ஹோட்டலில் நிகழ்ச்சி ஏற்பாடானது என்று கூறப்பட்டது.

35
திமுக ஐடி விங்

ஆனால் அந்த ஹோட்டல், கூட்ட நெரிசல் நிகழ்ந்த இடத்திற்கு அருகில் இருந்ததால், பாதுகாப்பு காரணங்களால் போலீசார் இடத்தை மாற்ற அறிவுறுத்தினர். அதே சமயம், கரூரில் உள்ள திருமண மண்டபங்களும் ஓட்டல்களும் விஜயின் வருகைக்கான இடம் வழங்க முன்வராததால், அவரது பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றம் நிலவுகிறது. இந்நிலையில் திமுக ஐடி விங், “கரூர் துயரம் நடந்தே 20 நாட்கள் ஆகிவிட்டது, இன்று விஜய் நேரில் சென்று ஆறுதல் சொல்லவில்லை.

45
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்

குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையும் வழங்கப்படவில்லை” என கடுமையாக விமர்சித்துள்ளது. திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள பதிவில், “இன்றோடு 20 நாட்கள் ஆகிவிட்டது. ஒரு கட்சி கரூரில் வெற்று விளம்பரத்திற்காக கூட்டம் சேர்க்க வேண்டும் என்ற வெறியில் எந்தப் பொறுப்புணர்வும் இல்லாமல் தற்குறித்தனமாக செயல்பட்டதால் ஒரு பெருந்துயரம் ஏற்பட்டு அவரைப் பார்க்க வந்து உயிரிழந்த அப்பாவி மக்களின் குடும்பங்களை இன்று வரை நேரில் சென்று சந்தித்து ஆறுதல் சொல்லவில்லை.

55
திமுக கடும் குற்றச்சாட்டு

அவர்களுக்கு நிவாரணத் தொகையைக் கூட வழங்கவில்லை. இந்த கள்ள மௌனம் என்பது உயிரிழந்த குடும்பத்தாரை அவமதிக்கும் செயல். இன்னும் நேரம் கிடைக்கவில்லையா அல்லது ஸ்கிரிப்ட் ரெடியாகவில்லையா அல்லது மனிதாபிமானம் என்பது அக்கட்சியின் அகராதியிலேயே இல்லையா? இல்லை தன் ரசிகர்களிடம் இருந்து தனக்கு பாதுகாப்பு வேண்டி கோரிக்கை வைத்துவிட்டு அனுமதி கிடைக்கவில்லை என்று உருட்டிய அதே உருட்டை மீண்டும் உருட்ட போகிறீர்களா?” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories