School Holiday: பள்ளி திறந்த கையோடு.! தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை.! குஷியில் துள்ளிக்குதிக்கும் மாணவர்கள்!

Published : Jun 12, 2026, 06:25 PM IST

School Student: ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான விடுமுறை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 26ம் தேதி மொகரம் பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை வருகிறது.

PREV
15
விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான்

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் விடுமுறை என்றாலே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் தான். அதுவும் தொடர் விடுமுறை வந்துவிட்டால் இரட்டிப்பு மகிழ்ச்சி தான். இந்நிலையில் முழு ஆண்டு தேர்வு முடிந்து பள்ளி மாணவர்கள் கோடை விடுமுறையில் இருந்து வருகின்றனர்.

25
கோடை விடுமுறை

இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு முடிந்து ஏப்ரல் 17ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. பின்னர் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவித்திருந்திருந்த நிலையில் வெயில் காரணமாக பள்ளிகள் திறப்பை ஜூன் 4ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

35
ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு

இதனையடுத்து ஜூன் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு அன்றைய தினமே பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் ஜூன் மாதங்களில் மாணவர்களுக்கு விடுமுறை என்பதை இருக்காது. அப்படி இருந்த போதிலும் அரசு விடுமுறை வருகிறதா என்பது தொடர்பாக மாணவர்கள் காலண்டரை புரட்டி பார்த்து வருகின்றனர்.

45
மொகரம் பண்டிகை

இந்நிலையில் ஜூன் மாதத்தில் எத்தனை நாட்கள் விடுமுறை வருகிறது என்பதை பார்ப்போம். ஜூன் 26ம் தேதி வெள்ளிக்கிழமை மொகரம் பண்டிகை மட்டுமே ஒருநாள் அரசு விடுமுறையாக வருகிறது. வார விடுமுறை கணக்கில் எடுத்துக்கொண்டால் சனி, ஞாயிறு என மொத்தம் 8 நாட்கள் விடுமுறை வருகிறது.

55
தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை

மொகரம் பண்டிகை வெள்ளிக்கிழமை வருவதால் அதற்கு மறுநாள் சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. இதனால் தொடர்ந்து 3 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை கிடைக்க உள்ளது. மூன்று நாட்கள் தொடர்ந்து விடுமுறை வருவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories