School Holiday: மார்ச் 9ம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டதான். அதுவும் பொது விடுமுறையை தவிர்த்து தமிழகத்தில் கோவில் திருவிழாக்கள், மசூதி, தேவாலயங்கள் மற்றும் கும்பாபிஷேகம் போன்ற முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பது வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் உள்ளூர் விடுமுறை தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
25
முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா
அதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களின் ஒன்று திருவப்பூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத தேர் திருவிழா வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழா மார்ச் 9ம் தேதி திங்கள் கிழமை நடைபெற உள்ளது.
35
மார்ச் 9ம் தேதி பள்ளி விடுமுறை
இதனை முன்னிட்டு மார்ச் 9ம் தேதியன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக மார்ச் 14ம் தேதி சனிக்கிழமை பணி நாள் எனவும் அம்மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.
மேற்படி உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு இயங்கும்.
55
இவர்களுக்கு விடுமுறை பொருந்தாது
மேற்குறிப்பிட்ட நாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தால், இந்த உள்ளூர் விடுமுறை அறிவிப்பு பொருந்தாது. மேலும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 9ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு முந்தை நாட்கள் சனி, ஞாயிறு வார விடுமுறை வருவதால் மொத்தம் 3 நாட்கள் விடுமுறை வருகிறது.