கை நிறைய சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்.. தமிழ்நாடு அரசு வழங்கும் 3 நாள் வீடியோ எடிட்டிங் பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?

Published : Feb 20, 2026, 02:26 PM IST

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். குறைந்தபட்ச கணினி அறிவு வேண்டும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

PREV
15
தமிழக அரசு

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கிடும் வகையில் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்பது பலரின் கனவாக இருந்து வருகிறது. அந்த கனவை நினைவாக்கும் வகையில் அரசு பல்வேறு பயிற்சிகளை வழங்குகிறது. இந்நிலையில் வீடியோ எடிட்டிங் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், புதிய தொழில் தொடங்க விரும்புபவர்களுக்கும் ஒரு அரிய வாய்ப்பை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது.

25
வீடியோ எடிட்டிங்

தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் – தமிழ்நாடு மூன்று நாள் “வீடியோ எடிட்டிங் மற்றும் நிறத் திருத்தம் (Colour Grading) பயிற்சி” தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் தொழில் முனைவோருக்கான ‘வீடியோ எடிட்டிங் மற்றும் நிறத்திருத்தம் (Colour Grading) பயிற்சி’ வரும் பிப்ரவரி 24 முதல் 26 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பயிற்சி நடைபெற உள்ளது.

35
பயிற்சி நோக்கம் / சிறப்பம்சங்கள்

* D.I.T (Digital Intermediate Technician) – செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளுடன் தொழில்முறை வீடியோ மற்றும் திரைப்பட எடிட்டிங் அறிமுகம்.

* நிறத்திருத்தம் (Colour Correction), நிற தரமாற்றம் (Colour Grading) மற்றும் Look Development.

* D.I Colour Correction – AI கருவிகள் மூலம்.

* NETFLIX / YOUTUBE உள்ளிட்ட தளங்களுக்கான Output Delivery.

* VFX / Fusion அறிமுகம்.

* Audio Post-Production – Fairlight அறிமுகம் தொழில் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள்:

* திரைப்படங்கள், விளம்பரப் படங்கள், YouTube வீடியோக்கள், திருமண வீடியோக்கள் மற்றும் META Content க்கான Video Editor

* திரைப்படங்கள் / OTT தளங்கள், இசை வீடியோக்கள், விளம்பரங்களுக்கு Colourist / Colour Grading Artist

* Post-Production Supervisor / Assistant / Assistant Editor

* சுயதொழில் (Freelance) Video Editor / Colourist (Freelance) Video Editor /Colourist.

45
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய / மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவி திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்த விவரங்களும் பயிற்சியின் ஒரு பகுதியாக விளக்கப்படும். இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் (ஆண்/பெண் /திருநங்கைகள்/ திருநம்பிகள்/ தொழில்முனைவோர்கள்) 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். குறைந்தபட்ச கணினி அறிவு வேண்டும், 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்கு பெறும்பயனாளிக்கென குறைந்த வாடகையில் தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.

55
விண்ணப்பிப்பது எப்படி?

மேலும், இப்பயிற்சியின் கூடுதல் விவரங்களைப் பெறவும் மற்றும் முன்பதிவு செய்திடவும் www.editn.in என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளவும். கைபேசி 8668100181 / 9360221280 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும். (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை. தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, சிட்கோ தொழிற்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, சென்னை - 600 032. பயிற்சி முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

Read more Photos on
click me!

Recommended Stories