இந்நிலையில், மேலும் கூடுதலாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டத்தின் அனைத்து காவல்துறை அதிகாரிகளும் காவலர்களும் சம்பவம் நடைபெற்ற கிராமம் மற்றும் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகிறது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளில் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், குற்றவாளியை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கும் வரை மாணவியின் உடலை வாங்க மாட்டோம். உடனடியாக குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என உறவினர்கள் மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் தூத்துக்குடி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கடந்த ஆறு மணி நேரமாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.