தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா? ஸ்பெஷல் பஸ்கள் ரெடி.. முழு விவரம் இதோ!

Published : Mar 12, 2026, 09:42 PM IST

தொடர் வார விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து கோவை, மதுரை, பெங்களூரு உள்பட பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

PREV
14
சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும்13ம் தேதி (வெள்ளிக்கிழமை), 14ம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 15ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

24
சென்னை டூ கோவை, மதுரை

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 13/03/2026 [வெள்ளிக்கிழமை) அன்று 310 பேருந்துகளும், 14/03/2026 (சனிக்கிழமை) 325 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

34
சென்னை டூ பெங்களூரு, திருவண்ணாமலை

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 13/03/2026 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 14/03/2026 சனிக்கிழமை அன்று 55 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

மாதவரத்திலிருந்து 13/03/2026 மற்றும் 14/03/2026 ஆகிய நாட்களில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

44
எப்படி முன்பதிவு செய்வது?

இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 10,774 பயணிகளும் சனிக்கிழமை 4,682 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 9,663 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ளலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories