TVK Vijay: விஜய்யின் அரசியல் ஆலோசகராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா ஒரு 'தற்பெருமை' பேசும் நபர். அவர் முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் விவாதத்திற்கு அழைக்கிறார்.
திருநெல்வேலியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் பேட்டியளிக்கையில்: விஜய் அரசியலுக்கு வருவது தமிழகத்திற்குத் தேவையில்லாத ஒன்று. அவர் அரசியலுக்கு முற்றிலும் லாயக்கற்றவர். திரையில் பார்ப்பது வேறு, நிஜ வாழ்க்கை வேறு. நிஜ வாழ்க்கையிலும் அவர் நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது அரசியல் வருகை இளைய சமுதாயத்தைச் சீரழித்துவிடும் என்று நான் அஞ்சுகிறேன் என்றார்.
25
விஜய் குணமே இதுதான்
விஜய்க்காக 27 ஆண்டுகள் உழைத்தவன் நான். அவரது படுக்கையறை முதல் டைனிங் ஹால் வரை அவருடன் இருந்தவன். ஆனால், இன்று அவருக்காக உழைத்த என்னைப் போன்றவர்களையோ, அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், தாய் ஷோபா அல்லது அவருக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் யாரையுமே அவருக்குத் தெரியவில்லை. உச்சத்திற்கு வந்த பிறகு ஏணிப்படியை உதைத்துத் தள்ளுவதுதான் அவரது குணம்.
35
மனைவியை மதிக்காத ஒருவர் எப்படி மக்களை மதிப்பார்?
விஜய்யின் மனைவி சங்கீதா அவரோடு இல்லை. 27 ஆண்டுகள் காதலித்து மணந்த மனைவியையே அவர் வெறுப்பேற்றுகிறார். சங்கீதாவைப் பழிவாங்கவே ஒரு நடிகையை மேடைக்கு அழைத்து வந்து உட்கார வைத்தார்கள். மனைவியையே மதிக்காத ஒருவர் எப்படி மக்களை மதிப்பார்? அவரது மகன் சஞ்சய் இன்னும் ஒரு படம் கூட இயக்கவில்லை, மகள் பட்டம் வாங்கப் போகும் இடத்திற்குத் தந்தையாக அவர் செல்லவில்லை. குடும்பத்தைச் சரியாகப் பராமரிக்காதவர் நாட்டை எப்படி ஆள்வார்?
விஜய்யின் அரசியல் ஆலோசகராக இருக்கும் ஆதவ் அர்ஜுனா ஒரு 'தற்பெருமை' பேசும் நபர். அவர் முதலமைச்சரையும், துணை முதலமைச்சரையும் விவாதத்திற்கு அழைக்கிறார். அவர்களுக்கு வேறு வேலை இல்லையா? அவருக்குத் துணிவிருந்தால் என்னோடு விவாதிக்க வரட்டும். லாட்டரி மார்ட்டின் குடும்பத்தில் புகுந்து அவர் என்னென்ன தில்லுமுல்லு செய்தார் என்பது எனக்குத் தெரியும். அவர் ஒரு அமாவாசை என கடுமையாக விமர்சித்துள்ளார்.
55
234 தொகுதியில் விஜய் டெபாசிட் கூட வாங்க மாட்டார்
விஜய் அரசியலுக்கு வருவதால் திமுகவுக்கோ அல்லது மற்ற கட்சிகளுக்கோ எந்தப் பாதிப்பும் இல்லை. வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் விஜய் தலைமையிலான கட்சி டெபாசிட் இழக்கும். இதை நான் அடித்துச் சொல்வேன் என்றார். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இந்தியாவிலேயே மிகச்சிறந்த ஆட்சியைத் தந்து கொண்டிருக்கிறார். அவரது நிர்வாகத் திறமையைப் பார்த்து ஈர்க்கப்பட்டே நான் திமுகவில் இணைந்தேன் என தெரிவித்துள்ளார்.