NDA கூட்டணிக்கு துண்டு போடும் தவெக..? அப்போ மாற்று சக்தினு சொன்னது..?

Published : Mar 13, 2026, 07:48 PM IST

தமிழகத்தின் மாற்று சக்தி நாங்கள் தான் என சொல்லி வந்த தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தற்போது மாவட்டச் செயலாளர்களுடன் கூட்டணிக்கு செல்வது தொடர்பாக தீவிர ஆலோசணை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

PREV
15
தமிழக வெற்றிக் கழகத்தின் 'புதிய அரசியல்' பாய்ச்சல்

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) மாநில அரசியலில் ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில், ஆளுங்கட்சியான திமுக மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக ஆகியவற்றுக்கு சவாலாகத் தமிழக வெற்றிக் கழகம் களம் காண்கிறது. பிப்ரவரி 2024-ல் தொடங்கப்பட்ட இக்கட்சி, குறுகிய காலத்திலேயே மாநிலம் முழுவதும் கிளைகளைப் பரப்பி, மார்ச் 2026 நிலவரப்படி வேட்பாளர் நேர்காணல் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு என அடுத்தகட்டத்திற்குச் சென்றுள்ளது.

25
முக்கிய தேர்தல் வாக்குறுதிகள்: 'சூப்பர் சிக்ஸ்' மற்றும் மகளிர் நலன்

சர்வதேச மகளிர் தினத்தை (மார்ச் 8, 2026) முன்னிட்டு மகாபலிபுரத்தில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில், விஜய் தனது முதல் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அதில் பெண்களைக் கவரும் வகையில் பல அதிரடி திட்டங்கள் இடம் பெற்றுள்ளன: அதன்படி, அரசுப் பணியில் இல்லாத, 60 வயதுக்குட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹2,500 உதவித்தொகை, ஆண்டுக்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள்.

மாணவர்களுக்கு உதவித்தொகை

9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி இடைநிற்றலைத் தவிர்க்க ஆண்டுக்கு ₹15,000 உதவித்தொகை, மகளிர் பாதுகாப்பு: பெண்களின் பாதுகாப்பிற்காக 500 'ராணி வேலுநாச்சியார்' சிறப்புப் படைகள் மற்றும் பொதுப் போக்குவரத்தில் அவசர கால பட்டன்கள் (Panic Buttons), ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவியாக 8 கிராம் தங்கம் மற்றும் பட்டுப்புடவை உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.

35
234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி?

தவெக-வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அளித்துள்ள தகவலின்படி, கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட ஆயத்தமாகி வருவதாக சொல்லப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கடந்த 10ம் தேதி முதல் பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் விஜய் நேரடியாக வேட்பாளர் நேர்காணலைத் தொடங்கி நடத்தி வருகிறார். முதல் நாளில் மட்டும் 55-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகளிடம் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார்.

45
கள நிலவரமும் சவால்களும்

சமீபத்திய கருத்துக்கணிப்புகள் (Parawheel Survey, March 2026) தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-விற்கு அடுத்தபடியாகத் தவெக மூன்றாவது பெரிய சக்தியாக உருவெடுத்துள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றன. குறிப்பாக, முதல்முறை வாக்காளர்கள் மற்றும் இளைஞர்களிடையே விஜய்க்கு இருக்கும் ஆதரவு மற்ற கட்சிகளுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

55
கூட்டணிக்க அடிபோடும் தவெக..?

இந்த நிலையில் பாஜக, அதிமுக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய தமிழக வெற்றி கழகம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த ஊகத்தை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில காலமாகவே விஜய் தனது பிரசார கூட்டங்களில் பாஜகவை விமர்சிப்பதைத் தவிர்த்து வந்தார். மேலும் இன்றைய தினம் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் மாவட்டச் செயலாளர்களுடன் தொலைபேசி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இதில் பெரும்பாலான நிர்வாகிகள் அதிமுக கூட்டணிக்கு ஒப்புக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே தவெகவும் பாஜகவுடன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தையில் 60 தொகுதிகள் கேட்டதாகவும், ஆனால் 45 தொகுதிகள் வரை வழங்க பாஜக முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories