மார்ச் 29ஆம் தேதி சனி பெயர்ச்சி இல்லையா.? திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர கோயில் முக்கிய அறிவிப்பு

சனிப்பெயர்ச்சி தேதி குறித்து நிலவும் குழப்பங்களுக்கு திருநள்ளாறு கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 2025 மார்ச் 29 அன்று சனிப்பெயர்ச்சி இல்லை என கூறியுள்ளது. 

Thirunallar Saneeswara Temple informs that there will be no Saturn transit on March 29th KAK

 Thirunallar Temple Announcement: Saturn Transit in 2026! சனிப்பெயர்ச்சி வருகிற மார்ச் 29ஆம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது. ஆனால் மற்றொரு தரப்பில் சனிப்பெயர்ச்சி மார்ச் 29ஆம் தேதி இல்லை, இது தவறான தகவல் என தெரிவிக்கப்பட்டது. இதனால் பல்வேறு குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில்  இதனையடுத்து புதுச்சேரி அரசு இந்து சமய நிறுவனங்கள் துறை நிர்வாக அதிகாரி (கோயில்கள்) அலுவலகம் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் ஸ்வாமி தேவஸ்தானம் திருநள்ளாறு. காரைக்கால் மாவட்டம் சார்பாக  திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருத்தலத்தில் சனி பெயர்ச்சி தேதிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

Thirunallar Saneeswara Temple informs that there will be no Saturn transit on March 29th KAK
சனிப்பெயர்ச்சி தேதி குழப்பம்

பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சனி பெயர்ச்சி (Saturn's transit) தொடர்பாக பல்வேறு செய்திகள் மற்றும் கட்டுரைகள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, 2025 மார்ச் 29 அன்று சனி பெயர்ச்சி நடைபெறும் என்ற தகவல்கள் பரவலாக வெளிவந்துள்ளன. எனவே இது குறித்து  திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சுவாமி தேவஸ்தானம்-அருள்மிகு ஸ்ரீ சனீஸ்வர பகவான் புண்ணியத் திருத்தலம் "வாக்கிய பஞ்சாங்கம்" முறையை பின்பற்றுவதை தெளிவுபடுத்துகிறோம்.  


சனிப்பெயர்ச்சி எப்போது.?

இந்த பாரம்பரிய கணிப்பு முறையின் படி, 2026ஆம் ஆண்டிலேயே சனிப் பெயர்ச்சி நடைபெறும் என தெரிவிக்கின்றோம். ஆகையினால் 29.03.2025 அன்று வழக்கமாக நடைபெறும் தினசரி பூஜைகள் மட்டுமே நடைபெறும். திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வர பகவான் திருத்தலத்தில் சனி பெயர்ச்சி சம்பந்தமான நிகழ்வு (Transit Rituals) நடைபெறும் சரியான தேதி மற்றும் நேரம் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

சனீஸ்வர கோயில் விள்க்கம்

பக்தர்கள், ஜோதிடர்கள், அர்ச்சகர்கள் மற்றும் பொது மக்கள் திருநள்ளாறு கோயிலில் பின்பற்றப்படும் பாரம்பரிய வாக்கிய பஞ்சாங்க வழிபாட்டு மரபை கருத்தில் கொண்டு செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என புதுச்சேரி அரசின் இந்து சமய நிறுவனங்கள் துறை தெரிவித்துள்ளது. 
 

Latest Videos

vuukle one pixel image
click me!