நாங்க ஒன்னும் சீட்டுக்காக திமுக.வுடன் ஒட்டிக்கொண்டு இருக்கவில்லை - திடீரென டென்ஷனான திருமா

Published : Oct 16, 2025, 07:02 AM IST

தேர்தலில் சீட்டுக்காக தி.மு.க.,வுடன் ஒட்டிக்கொண்டு இருக்கவில்லை. பாஜகவை வீழ்தத திமுக கூட்டணியில் விசிக பயணிக்கும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

PREV
14
முதல்வர் நாற்காலி தேவையில்லை

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தர்மபுரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக மாறியுள்ளது. மக்களுக்காக எதையும் செய்யாமல், நான் தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என பலர் கிளம்பியுள்ளனர். சமத்துவத்தை கட்டமைப்பது தான் நமது கடமை, முதல்வர் நாற்காலி தேவையில்லை.

24
பாஜக.வை வீழ்த்த...

சீட்டுக்காக தி.மு.க.,வுடன் கூட்டணியாக ஒட்டிக்கொண்டு இருக்கவில்லை. அதைவிட கூடுதலாக சீட்டு கொடுப்பதாக பலர் கூறினர்.  ஆனால், எங்களுக்கு தேவையில்லை. தற்போது நாட்டில் இருக்கும் பிரச்னைகளுக்கு காரணமான பா.ஜ.,வை வீழ்த்த, ராகுல் தலைமையிலான காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணி நமக்கு தேவை.

34
விசிக.வை குறைத்து மதிப்பிடாதீர்கள்

நடிகர்கள் கட்சி தொடங்கினால் நம்மை சீண்டுகிறார்கள். விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போதும், விஜய் அரசியலுக்கு வந்தபோதும், நான் பதற்றமடைவதாக கூறுகின்றனர். நம்மை குறைத்து மதிப்பிடுகின்றனர். விஜய் கட்சி தொடங்கியதும், தலித்துகள் அவர் பின்னால் போகிறார்கள் என பேசுகின்றனர். கட்சியில் இரண்டு பேர் மீது நடவடிக்கை எடுத்ததும் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார் அமைப்புடன் சேர்ந்து சங்கியாக மாறிவிட்டனர்.

44
திராவிட அரசியலின் பாதுகாப்பு அரண் விசிக

வரும், 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியை தோற்கடிப்பதே த.வெ.க., - அ.தி.மு.க., கட்சிகளின் நோக்கம்; அதுதான் பா.ஜ.க நோக்கமாக உள்ளது. திராவிட அரசியலுக்கு விடுதலை சிறுத்தைகள் தான் பாதுகாப்பு அரணாக உள்ளது” என்று தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories