தமிழர்கள் செத்து மடியும் போது வாயே திறக்காத விஜய்..! தவெக பருப்பு இங்கு வேகாது..! திருமா அட்டாக்

Published : Sep 24, 2025, 01:15 PM IST

புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் திமுக எதிர்ப்பு அரசியலை செய்யவில்லை. மாறாக திமுக வெறுப்பு அரசியலையே மேற்கொள்கிறார். இது தமிழகத்தில் எடுபடாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

PREV
14
பொதுக்கூட்டத்திற்கு நிபந்தனை விதிப்பது வழக்கமான ஒன்று..

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான தொல்.திருமாவளவன் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தனது சுற்றுப்பயணத்திற்கு காவல் துறையினர் கடும் நெருக்கடி தருவதாக தவெக தலைவர் விஜய் கூறுகிறார். அரசியலில், பேரணி, மாநாடு, பொதுக்கூட்டம் இவை அனைத்தும் வழக்கமாக நடக்கக்கூடிய ஒன்று தான். விஜய்யின் பரப்புரையின் போது விதிக்கப்படும் அனைத்து கட்டுப்பாடுகளும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் விதிக்கப்படும்.

24
விஜய்க்கு புதிதாக இருக்கலாம்

காவல் துறையினரின் கட்டுப்பாடு விஜய்க்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால் இவை அனைத்தும் வழக்கமான ஒன்று தான். ஆளும் கட்சி கூட்டணியில் இருப்பவர்களுக்கும் கூட இந்த நிபந்தனைகள் விதிக்கப்படுவது இயல்பு தான். அவருக்கு காவல் துறையினர் எந்தவிதமான நெருக்கடியும் அளிப்பதாக தெரியவில்லை. மாறாக அவர் மிகவும் சுதந்திரமாகவே செயல்படுகிறார். திமுக எதிர்ப்பு என்பதை விட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீது எதிர்ப்பு என்பதை விட வெறுப்பு அரசியலை செய்து வருகிறார். இதனை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்.

34
உங்கள் திட்டங்களை சொல்லுங்கள்

அரசியல் களத்தில் தாம் பொறுப்புக்கு வந்தால் மக்களுக்கு என்ன நல்ல திட்டங்களை செய்யப் போகிறோம் என்பதை மக்களிடம் தெரிவித்தால் தான் மக்கள் அவரை ஏற்பார்களா? நிராகரிப்பார்களா என்பது தெரியும். ஆனால் அதனை அவர் செய்யவில்லை. வெறும் வெறுப்பு அரசியலை மட்டும் வைத்து வாக்குகளை பெற்றுவிட முடியாது. எதிர்காலத்தில் அவரது நடவடிக்கைகள் எப்படி இருக்கும், அவர் என்ன திட்டங்களை வெளிப்படுத்துவார் என்பதை அறிய மக்கள் ஆவலாக இருக்கின்றனர். ஆனால் அதனை அவர் செய்யவில்லை.

44
ஈழத்தமிழர் பிரச்சினையை வைத்து பரிதாபம் தேடும் விஜய்..

ஈழத்தமிழர்களுக்காக கடந்த 35 ஆண்டுகளாக தமிழகத்தில் பல போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த விவகாரம் உச்சத்தில் இருந்தபோது கூட அதற்காக விஜய் வாய்த்திறந்ததாக தெரியவில்லை. ஆனால் அப்பொழுதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு இப்போது விஜய் ஈழத்தமிழர்களை வைத்து பரிதாபம் தேடிக்கொள்ம் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். விஜய்யின் உணர்வு உண்மையான உணர்வாக இருந்திருந்தால் அப்போதே வெளிப்பட்டிருக்க வேண்டும். அப்படி வெளிப்பட்டதாக எனக்கு தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories