Published : Dec 08, 2024, 12:27 PM ISTUpdated : Dec 08, 2024, 12:37 PM IST
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் சர்ச்சைக்குரிய பேச்சு, திமுக கூட்டணியில் பிளவை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் திருமாவளவன் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க முடிவு
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளது. இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாகவே பார்க்கப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல் மற்றும் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியை பறித்தது. இந்த கூட்டணிக்கு எதிராக போட்டியிட்ட அதிமுக, பாஜக தோல்வியை மட்டுமே பரிசாக பெற்றது. இந்த நிலையில் வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இதே கூட்டணி தொடருமா.? அல்லது கூட்டணி மாற்றம் ஏற்படுமா.? என்ற கேள்வி எழுந்துள்ளது.
25
thiruma vs Stalin
திமுகவிற்கு எதிராக ஆதவ் அர்ஜூனா
இதற்கு காரணம் அதிமுக மற்றும் புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் புதிய கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். எனவே அந்த கூட்டணிக்கு திமுக அணியில் உள்ள கட்சிகள் பல்டி அடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவிவருகிறது. அதற்கு ஏற்றார் போல விடுதலை சிறுத்தைகள் கட்சியில் துணை பொதுச்செயலாளர் சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்ற ஆதவ் அர்ஜூனா கூட்டணி தொடர்பாகவும், கூட்டணி அமைச்சரவை தொடர்பாகவும் கருத்தை தெரிவித்திருந்தார். நேற்று முன்தினம் நடிகர் விஜய் பங்கேற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ஆதவ் அர்ஜூனா தமிழகத்தில் மன்னர் ஆட்சி நடைபெற்று வருவதாகவும் 2026ஆம் ஆண்டு முடிவு கட்டப்படும் என தெரிவித்தார்.
35
thol Thirumavalavan and Vijay
ஆதவ் அர்ஜூனா நீக்கமா.?
இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது ஆதவ் அர்ஜூனிவின் சொந்த கருத்து எனவும், விடுதலை சிறுத்தை கட்சிக்கு சம்பந்தமில்லையென தெரிவித்தார். இந்தநிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், ஆதவ் அர்ஜூனாவின் செயல்பாடுகள் அண்மைக்காலமாக கட்சிக்கு எதிராக இருப்பதை முன்னணி நிர்வாகிகள் உணர்ந்துள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக கட்சி தலைமையின் கவனத்திற்கு முன்னணி தோழர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். துணை பொதுச்செயலாளர்கள் பத்து பேரில் ஒருவர் தான் ஆதவ்அர்ஜூனா, கட்சி கட்டுப்பாட்டை மீறும் போது, கட்சிக்கு ஊறு விளைவிக்கிற வகையில் செயல்படும்போது உயர்நிலைக் குழுவில் விவாதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
45
Aadhav Arjuna and Stalin
எந்த அழுத்தமும் இல்லை
தலித் அல்லாதவர்களை பாதுகாக்க வேண்டியது கட்சியின் அடிப்படை விதி என தெரிவித்தவர், ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது குறித்து விரைவில் அறிவிப்போம் என தெரிவித்தார். இந்த விவகாரத்தில் திமுகவோ, வேறு யாரோ எந்த அழுத்தமும் எள்முனை அளவு கூட தரவில்லையென கூறினார். இதனிடையே திமுக- விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில்
முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க இருப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், அண்மையில் தமிழ்நாட்டைத் தாக்கிய ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
55
thiruma meet stalin
ஸ்டாலினை சந்திக்கும் திருமாவளவன்
இப்பேரிடரிலிருந்து மக்களை மீட்கும் வகையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் #விசிக சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கென ரூ. பத்து இலட்சம் வழங்கிட நேற்றைய உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் தலா ஒரு மாத சம்பளத்தையும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலா இரண்டுமாத சம்பளத்தையும் கொண்டு இந்நிதி மாண்புமிகு முதலமைச்சரிடம் வழங்கப்படும் என திருமாவளவன் கூறியுள்ளார்.