கூட்டணியை முறித்துக் கொண்ட திருமாவளவன்..? தனித்து போட்டியிடுவதாக அதிரடி அறிவிப்பு..

Published : Mar 24, 2026, 10:39 AM IST

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதனால் கூட்டணி கட்சிகள் மத்தியில் சலசலப்பு உருவாகியுள்ளது.

PREV
14
புதுவை சட்டமன்ற தேர்தல்

புதுச்சேரியில் வருகின்ற ஏப்ரல் 9ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. மொத்தமாக 30 தொகுதிகள் கொண்ட புதுவையில் திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பதாக அறிவித்தன. ஆனால் இந்த கூட்டணியில் தொகுதி பங்கீடு வேட்புமனு தாக்கலின் கடைசி நாள் வரை நீடித்தது. இதன் காரணமாக காங்கிரஸ் சார்பில் 30 தொகுதிகளிலும், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் 30 தொகுதிகளிலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

24
தொகுதி பங்கீட்டில் குழப்பம்..

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 14 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டன. ஆனால் திமுக கூட்டணியில் விசிக சார்பில் போட்டியிடுவதாக வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட ஊசுடு, நெட்டப்பாக்கம், உழவர்கரை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளது. இதனால் விசிக நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கி உள்ளது.

34
விசிக தனித்து போட்டி

மேலும் திமுக கூட்டணியில் 2 தொகுதிகளை ஒதுக்க கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்க திமுக முன்வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று காலை பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியட்ட திருமாவளவன் புதுவையில் விசிக தனித்து போட்டியிடுவதாகக் கூறி பரபரப்பைக் கிளப்பினார்.

44
3 தொகுதிகளில் தனித்து போட்டி..

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதுச்சேரியில் விசிக சார்பில் தற்போது வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள ஊசுடு, நெட்டப்பாக்கம் மற்றும் உழவர்கரை ஆகிய 3 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 3 தொகுதிகளைத் தவிர்த்து மற்ற தொகுதிளில் காங்கிரஸ், திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக” தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories