மாம்பழம் சின்னம் யாருக்கு? மூன்று நாட்கள் டைம்.! அன்புமணிக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்!

Published : Mar 24, 2026, 08:32 AM IST

Ramadoss Vs Anbumani: கட்சிக்குள் பிரச்சனை ஏற்பட்டால் சின்னத்தை முடக்கி வைப்பது தான் நடைமுறையாக இருந்து வருகிறது. குலுக்கல் முறையில் கொடுக்கும் முறையும் பின்பற்றவில்லை.

PREV
14
ராமதாஸ் Vs அன்புமணி

பாமகவின் பெயர், சின்னம் பயன்படுத்த அன்புமணிக்கு தடை விதிக்கக்கோரியும், தேர்தல் ஆணையம் அனுப்பி கடிதத்தை ரத்து செய்யக்கேரியும் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், உரிமை​யியல் நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்ள வழக்கை சுட்​டிக்​காட்​டியதுடன், உள்​கட்சி பிரச்​சினை தீரும் வரை தேர்​தலை தள்ளிவைக்க முடி​யாது என்​றும், உரிமை​யியல் நீதி​மன்ற தீர்ப்​புக்கு பிறகே உயர் நீதி​மன்​றத்தை நாட முடி​யும் என்று தெரிவித்து வழக்கை மே மாதத்துக்கு ஒத்திவைத்தது.

24
மாம்பழ சின்னத்தை முடக்க வேண்டும்

இந்​நிலை​யில், சின்னத்தை முடக்குவது தொடர்பான வழக்கு உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த், ஜோய்​மால்ய பக்​சி, வி.எம்​.பஞ்​சோலி அடங்​கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்: கட்சிக்குள் பிரச்சனை ஏற்பட்டால் சின்னத்தை முடக்கி வைப்பது தான் நடைமுறையாக இருந்து வருகிறது. குலுக்கல் முறையில் கொடுக்கும் முறையும் பின்பற்றவில்லை. இதனால் கட்சி யாருக்கு சொந்தம் என்பது தீர்மானிக்கும் வரை மாம்பழ சின்னத்தை முடக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

34
தேர்தல் ஆணையம்

அன்புமணி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்: சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்த மனுவை மனு​தா​ரர் திரும்​ப பெற்​றுள்​ளார். மனு​தா​ரர் ராம​தாஸ் தரப்​பில் சின்​னம் தொடர்​பாக எவ்​வித தடை உத்​தர​வை​யும் பெற​வில்​லை. அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் உள்விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது. ஆணையத்திடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தங்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டதாக வாதிட்டார்.

44
மூன்று நாட்​களுக்​குள் தீர்ப்பு வழங்க வேண்டும்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த், அன்புமணி தரப்புக்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்கியது யார்? இரு தரப்பும் மாம்பழத்தை பிழிந்து ஜூஸ் எடுத்து விடாதீர்கள். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் பிரெண்ட்லி மேட்ச் ஆடுகிறது. இந்த விவ​காரத்​தில் உரிய மனுவை உரிமை​யியல் நீதி​மன்​றத்​தில் ராமதாஸ் தாக்​கல் செய்​ய​லாம் என அறிவுறுத்தினார். புதிய மனுவை அவர் தாக்​கல் செய்​யும்​போது, அந்த மனு மீது 3 நாட்​களுக்​குள் விசா​ரணை நடத்தி தீர்ப்பு அளிக்க வேண்​டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டார். இதனையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

Read more Photos on
click me!

Recommended Stories