
தமிழக அரசு கல்வித்துறைக்கு மாணவர்களுக்கு பல்வேறு முக்கியத்துவம் மற்றும் சிறப்பு திட்டங்களை கொண்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்களே பாலியல் சீண்டலில் ஈடுபடும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு என்.சி.சி முகாம் நடத்துவதாக ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது இரவில் பள்ளி வளாகத்தில் தங்கிய மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து என்சிசி முகாம் நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
இதனையடுத்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிச்சாமி தனியார் பள்ளிகளில் அனுமதி பெறாமல் என்சிசி உள்ளிட்ட முகாம்கள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் சுயநிதிப் பள்ளிகளில் என்சிசி, என்எஸ்எஸ், ஸ்கவுட் மற்றும் ஜேஆர்சி போன்ற அமைப்புகள் செயல்படுகின்றன. அந்த அமைப்புகளை பள்ளிகளில் செயல்படுத்த மாநில அமைப்பிடம் முறையாகப் பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். முறையாக பயிற்சிபெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் எந்தவொரு அமைப்பும் பள்ளியில் செயல்படக்கூடாது. மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் மூலமாகவும், மாணவிகளுக்கு பெண் ஆசிரியைகள் மூலமாகவும் மட்டுமே பயிற்சிகள் வழங்க வேண்டும். அனுமதி இல்லாமல் நடத்தும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அதேபோல் சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் மாணவிகளுக்கு ஊக்கமளிக்க பரம்பொருள் அறக்கட்டளை என்ற அமைப்பைத் தொடங்கி, இயங்கி வரும் மகாவிஷ்ணு என்பவர் சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டார். அப்போது முன்ஜென்மம், அடுத்த ஜென்மம், கடந்த காலப் பாவங்கள் என தொடர்ந்து நிரூபிக்கப்படாத கட்டுக்கதைகள் குறித்து மட்டுமே மாணவர்கள் முன்னிலையில் பேசினார்.
இதையும் படிங்க: TN School Student: பள்ளி மாணவர்களுக்கு! இது விடுமுறை தொடர்பான அறிவிப்பு இல்ல! அதை விட முக்கியம்!
அப்போது மனிதர்கள் முந்தைய பிறவில் செய்த பாவ புண்ணியங்கள் அடிப்படையில் இந்த பிறவியில் பலன்களை அனுபவிக்கிறார்கள். இதன் காரணமாக தற்போது பலர் கை, கால்கள் இல்லாத நிலையில், மாற்றுத் திறனாளிகளாகப் பிறக்கின்றனர் என்று மகாவிஷ்ணு பேசிக்கொண்டிருந்ததை ஒட்டுமொத்த பள்ளியிலும் அமைதியாகே கேட்க சார் ஆன்மீக சொற்பொழிவா அல்லது மாணவர்களுக்கான மோட்டிவேஷனல் ஸ்பீச்சா என்று பார்வை குறைபாடு கொண்ட ஆசிரியர் சங்கர் வெகுண்டெழுந்தார். ஆனால் மற்ற ஆசிரியர்கள் யாரும் துணைக்கு வரவில்லை. விவரம் தெரியாத மாணவர்களும் கைத்தட்டி ரசித்தனர். இதனால் மகா விஷ்ணு மற்றும் பேச்சாளர் மகா விஷ்ணு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு மிரட்டும் வகையில் பேசிய வீடியோ வைரலானது. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேரடியாக பள்ளிக்கே சென்று தமிழாசிரியர் சங்கரை பாராட்டினார்.
பின்னர் மகா விஷ்ணுவை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தமிழரசி திருவள்ளுவர் மாவட்டத்திற்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கல்விக்கு தொடர்பில்லாத எந்த நிகழ்ச்சிளையும் அரசு அனுமதியின்றி நடத்தக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் மற்றும் முக்கிய உத்தரவுகளை பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்; மாணவர்களின் பெற்றோர்களிடம் மட்டுமே தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவர்கள் வருகை புரியாததற்கான காரணம் முதலியவற்றைக் கேட்டு அறிய வேண்டும். விடுமுறை நாட்களில் பள்ளியில் எந்த ஒரு வெளி நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது. அரசுத்துறை சார்ந்த நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக இருப்பினும் முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்பட வேண்டும். துறை சார்ந்த வல்லுநர்கள், பேராசிரியர்கள், அறிஞர்கள் ஆகியவர்களை பள்ளிக்கு அழைத்து மாணவர்களுக்கு ஆர்வமூட்டும் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடத்துவதாக இருந்தால், அவர்கள் பேச உள்ள பொருள் குறித்து முன்னரே முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவித்து முதன்மை கல்வி அலுவலரின் அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
மேலும் எக்காரணத்தை முன்னிட்டும் மாணவர்களிடம் சாதி, மதம் தொடர்பான கருத்துக்களை ஆசிரியர்கள் பேசுதல் கூடாது. அரசியல்வாதிகள் யாரையும் பள்ளியில் அனுமதிக்க கூடாது. தலைமையாசிரியர்கள் அனைத்து அறிவுரைகளையும் புரிந்து கொண்டு பள்ளியில் பிரச்சனை இல்லாமல் வகையில் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.