இது மட்டுமில்லாமல் ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் மதுபானங்களை டெலிவரி செய்யும் நடைமுறை இருக்கும் நிலையில் அதனை மற்ற மாநிலங்களிலும் விரிவுப்படுத்த திட்டமானது வகுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு, கர்நாடகா, பஞ்சாப், கோவா, கேரளா போன்ற மாநிலங்கள் வீட்டிற்கே நேரடியாக மதுபானங்களை டெலிவரி செய்வதை அனுமதிக்கும் திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே தமிழகத்தில் மதுவால் இளைஞர்கள் சீரழிவதால் மது விலக்கை அமல்படுத்தப்பட வேண்டும் என ராமதாஸ், அன்புமணி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.