திருவண்ணாமலை கிரிவலம் போறீங்களா.! சிறப்பு ரயில், பேருந்து அறிவிப்பு- எங்கிருந்து தெரியுமா.?

First Published Sep 17, 2024, 7:20 AM IST

திருவண்ணாமலையில் நடைபெறும் பௌர்ணமி கிரிவலத்திற்காக விழுப்புரத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. கூடுதலாக, தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னை மற்றும் பிற முக்கிய நகரங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

tiruvannamalai

திருவண்ணாமலை கிரிவலம்

திருவண்ணாமலையில் உள்ள கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினந்தோறும் வந்து செல்கிறார்கள். அதிலும் பௌர்ணமி கிரிவலம் என்றால் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அந்த வகையில் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிவார்கள். இந்த நிலையில் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில் மற்றும் சிறப்பு பேருந்துகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் பௌர்ணமி கிரிவலம் இன்றைய தினம்  (செப்.17) நடைபெறவுள்ளது. இந்த கிரிவலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்கப்படுகிறது.  எனவே பக்தர்களின் வசதிக்காக 2 சிறப்பு ரயில்கள் விழுப்புரத்திலிருந்து இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Train Cancelled

சிறப்பு ரயில் அறிவிப்பு

அதன் படி,  விழுப்புரத்திலிருந்து இன்று (செப்.17) காலை 9.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (ரயில் எண்.06130) திருவண்ணாமலையை இன்று முற்பகல் வந்தடையவுள்ளது. மறு மார்க்கத்தில்  திருவண்ணாமலையிலிருந்து இன்று பிற்பகல் 12.40 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் விழுப்புரத்திற்கு (வ.எண்.06129), பிற்பகல் 2.15 மணிக்கு வந்தடையும் என கூறப்பட்டுள்ளது. மற்றொரு சிறப்பு ரயில்  விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 9.15 மணிக்குப் புறப்படும் எனவும், அந்த ரயில் (வ.எண்.06131) இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தை சென்றடையும் என கூறப்பட்டுள்ளது.

Latest Videos


tiruvannamalai girivalam

சிறப்பு பேருந்து அறிவிப்பு

மறுமார்க்கத்தில் நாளை (செப்.18) அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து புறப்படும் ரயில்  (வ.எண் 06132) அதிகாலை 5 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையம் வந்தடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழக போக்குவரத்துக் கழகம் சார்பிலும் சிறப்பு பேருந்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி 17/09/2024 இன்று பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு. சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

koyambedu

கூடுதல் பேருந்துகள் இயக்கம்

இதனையடுத்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அந்த வகையில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 300 பேருந்துகளும். கோயம்பேட்டிலிருந்து 15 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் 30 பேருந்துகளும் கூடுதலாக இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 17/09/2024 இன்று 175 பேருந்துகள் தினசரி இயக்ககூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வசூல் வேட்டையில் கில்லி: நாட்டின் 5 பணக்கார ரயில்கள் எதுனு தெரியுமா?
 

kilambakkam

 முன்பதிவு செய்து பயணிக்க வேண்டுகோள்

இது மட்டுமில்லாமல் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 30 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு (17/09/2024) இன்று இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும், சென்னை, மதுரை, சேலம். கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர். திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் ஒசூர் ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. . பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 

thiruvannamalai

திருவண்ணாமலையில் கிரிவலம்

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் உள்ளது. திருவண்ணாமலையில் சிவனே மலை வடிவாக காட்சி தருவதாக ஐதீகமாகும். திருவண்ணாமலை கோயிலை சுற்றி  14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் சுற்றுவட்டப்பாதையை  மாதம்தோறும் வரும் பவுர்ணமி தினத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வரும் பக்தர்கள் சுற்றி வருவார்கள். அந்த வகையில். புரட்டாசி பவுர்ணமியையொட்டி இன்று திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவியவுள்ளனர்.

இதனையடுத்து திருவண்ணாமலையை சுற்றி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கிரிவலம் செல்பவர்களின் பசியை போக்கும் வகையில் பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் குடிநீர் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் புரட்டாசி மாதத்தில் இன்று வரக்கூடிய பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரமானது அறிவிக்கப்பட்டுள்ளது அந்த வகையில், இன்று  காலை 11.27 மணிக்கு தொடங்கி மறுநாள்(புதன் கிழமை) 18-ம் தேதி காலை 9.10 மணி வரை கிரிவலம் செல்லமாம், 

click me!