800 கிலோ சிறுதானியம்; 12 மணி நேர விடா முயற்சி: பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை சிறுமி படைத்த உலக சாதனை

First Published Sep 16, 2024, 6:41 PM IST

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னையைச் சேர்ந்த பள்ளி சிறுமி ஒருவர் 800 கிலோ சிறு தானியத்தை பயன்படுத்தி 600 சதுரஅடி பரப்பில் மோடியின் படத்தை வரைந்து உலக சாதனை படைத்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த 13 வயது மாணவி பிரெஸ்லி ஷெகினா, 800 கிலோ தானியத்தை பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடியின் உருவப்படத்தை 12 மணிநேரம் தொடர்ந்து வரைந்து உலகின் மிகப்பெரிய தானிய ஓவியத்தை உருவாக்கி உலக சாதனை படைத்துள்ளார். இந்தப் படைப்பு செப்டம்பர் 17ஆம் தேதி பிரதமரின் பிறந்தநாளையொட்டி வெளியிடப்பட்டது.

சென்னையைச் சேர்ந்த பிரதாப் செல்வம் மற்றும் சங்கீரணி ஆகியோரின் மகள் பிரெஸ்லி ஷெகினா. இவர்கள் சென்னை கோலப்பாக்கம் பகுதியில் வசித்து வருகின்றனர். பிரெஸ்லி தற்போது சென்னையில் உள்ள பிரபல தனியார் பள்ளி ஒன்றில் 8 ஆம் வகுப்பு படிக்கிறார்.

Latest Videos


ஷெகினா 800 கிலோ தானியத்தை பயன்படுத்தி 600 சதுர அடி பரப்பளவில் பிரதமர் மோடியின் பிரமாண்டமான உருவப்படத்தை உருவாக்கி உள்ளார். காலை 8:30 மணிக்குத் தொடங்கி இரவு 8:30 மணிக்கு முடித்து, இந்தத் திட்டத்திற்காக 12 மணிநேரம் செலவிட்டார்.

பிரெஸ்லி ஷெகினாவை யூனிகோ உலக சாதனைகள் மாணவர் சாதனைப் பிரிவில் அங்கீகரித்துள்ளது. யூனிகோ உலக சாதனைகளின் இயக்குனர் ஆர்.சிவராமன் அவருக்கு உலக சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினார். பள்ளி நிர்வாகி, முதல்வர், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் அவரது குறிப்பிடத்தக்க சாதனையைக் கொண்டாடினர்.

செவ்வாய் கிழமை பிரதமர் நரேந்திர மோடியின் 74வது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், இதனை முன்னிட்டு மாணவி இந்த ஓவியத்தை வரைந்து பிரதமருக்கு அர்ப்பணித்து உள்ளார். மாணவியின் முயற்சிக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

click me!