8வது படித்திருப்பவர்களுக்கும் வேலை.! தமிழக அரசின் சூப்பர் திட்டம்- என்ன தெரியுமா.?

First Published | Sep 17, 2024, 12:33 PM IST

தமிழகத்தில் படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டங்கள் மூலம் உதவிடும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அரசு துறைகளில் 75,000 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டிஜிட்டல் மார்க்கெட்டிங், பேக்கரி போன்ற துறைகளில் பயிற்சி அளிக்கப்பட்டு, சுய வேலைவாய்ப்புக்கும் வழிவகை செய்யப்படுகிறது. மேலும் 8வது படித்திருப்பவர்களுக்கும் வேலை வாய்ப்பை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

தமிழக அரசின் திட்டங்கள்

தமிழகத்தில் பள்ளிக்கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி முடிந்து ஆண்டு தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி வருகின்றனர். அவர்களுக்கு உதவிடும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக தமிழ்புதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி படிக்கும் போதே மாணவர்களுக்கு உதவிடும் வகையில் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதே போல அரசுப்பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வியில் படிக்கும் போது கல்வி உதவி தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் நான் முதல்வன் திட்டத்தின் தொலைநோக்கு பார்வையாக தமிழ்நாட்டின் உயர் கல்வியில் மொத்த சேர்க்கை விகிதத்தை 51 சதவிகிதத்தில் 100% ஆக உயர்த்தப்பட வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

தனியார் துறையில் வேலை வாய்ப்பு

மேலும் மாணவர்கள் உயர்கல்வியில் சேரும் போது எந்த படிப்பை படித்தால் பயனுள்ளதாக இருக்கும் ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது. அதே போல சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கும் இலவசமாக பயிற்சி வழங்குவதோடு மாதம், மாதம் உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மாணவர்கள் படிப்பு முடித்து அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பை தேடி வருகிறார்கள்.

அந்த வகையில் தமிழக அரசின் பணியில் இணைய வேண்டும் என விரும்பும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பாக இலவசமாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசு பணிகள் மட்டுமில்லாமல் மத்திய அரசு பணியில் இணைவதற்கான தேர்வுகள் தொடர்பாகவும் அதற்கான பயிற்சியையும் நடத்தி வருகிறது. 

Tap to resize

அரசு பணியாளர் தேர்வு வாரியம்

இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்று பயனடைந்து வருகின்றனர். தமிழக அரசும் இன்னும் 6 மாதம் முதல் ஒரு வருட காலத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 75ஆயிரம் பணியிடம் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் ஊரக வளர்ச்சி துறை மூலமாகவும் 30ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தநிலையில் சொந்த தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கும் தமிழக அரசு வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது.  8வது மற்றும் 10வது படித்திருக்கும் இளைஞர்களுக்கு சொந்த தொழில் தொடங்க பயிற்சியை தமிழக அரசு வழங்கி வருகிறது. டிஜிட்டல் மார்க்கெட்டிங்' தொடர்பான வகுப்புப் நேரடிப் பயிற்சியானது வருகிற செப்டம்பர் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சொந்த தொழில் தொடங்க பயிற்சி

இந்த பயிற்சி வகுப்பில் சமூக ஊடகங்கள், எஸ்.சி.ஓ மற்றும் கட்டண விளம்பரம், இலக்கு பார்வையாளர்களை அடையாளம் காணுதல், டிஜிட்டல் வணிக தீர்வுகள், சமூக ஊடக தரவு. டிஜிட்டல் இருப்பு. தேவை மற்றும் வாடிக்கையாளர்களை இணைத்தல் உள்ளிட்டவைகள் தொடர்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதே போல பேக்கரி தொழிற்பயிற்சி, வீடுகளில் பயன்படுத்தப்படும் பினாயில், சோப்பு உள்ளிட்ட பொருட்கள் தயாரிப்பது தொடர்பாகவும் பயிற்சி அளித்து கடனுதவி தொடர்பான ஆலோசனையும் வழங்கப்பட்டு வருகிறது.

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

இதே போல அரசு பணியில் சேரமுடியாத இளைஞர்களுக்கு தனியார் துறை மூலமாகவும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.  பிரபல தனியார் நிறுவனமான டாடா நிறுவனத்தோடு இணைந்து தமிழக அரசும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பெண்களுக்கு பயிற்சி அளித்து பணியில் சேர்த்தும் கொள்கிறது.

இதே போல தமிழகம் முழுவதும் அந்த அந்த மாவட்டங்களில் தனியார் துறை மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.   இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் திண்டுக்கல் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தின் சார்பாக வருகின்ற 20ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல்லில் வேலைவாய்ப்பு முகாம்

 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் எனவும் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளி கிழமைகளில் தனியார் முன்னணி நிறுவனங்களுடன் இணைந்து முகாம் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பிரம்மாண்ட தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கல்வித் தகுதி

8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்கள்.

பட்டதாரிகள்

பட்டைப் படிப்பு படித்தவர்கள்

ஐடிஐ

கணினி இயக்குபவர்கள், ஓட்டுநர்களும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

job fair

விண்ணப்பிக்க அழைப்பு

மேலும் கூடுதல் விவரங்களுக்கு தொடர்பு கொள்க 94990 55924 தொலைபேசி எண்களும் கொடுக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்பவர்கள்  tnprivatejops.gov.in வலைத்தளத்தில் முன் பதிவு செய்த பின்னர் வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

Latest Videos

click me!