உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி
இன்று தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து ( 15 ,16 தேதிகளில்) நாளை மற்றும் நாளை மறுதினம் வட தமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 5 தினங்களுக்கு தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.