தமிழக அரசியலில் பாஜக
தமிழகத்தில் திமுக- அதிமுக மட்டுமே மாறி, மாறி ஆட்சி அமைத்து வரும் நிலையில் இந்த கட்சிகளுக்கு எதிராக கட்சியை தொடங்கி ஆட்சியை பிடிக்க பல நடிகர்கள் முயன்றனர். ஆனால் இந்த இரு பெரும் கட்சிகளின் பலத்தால் ஒன்றும் செய்ய முடியாமல் அந்த கட்சிகளோடே கூட்டணி வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் தேசிய கட்சியான பாஜக இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்த நிலையில் தென் மாநிலங்களில் எப்படியாவது கால் ஊண்டிட திட்டமிட்டது. அதற்கு வாய்ப்பாக முதலில் அமைந்தது கர்நாடகா,
எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்! திமுக நிர்வாகிகளே தயார் நிலையில் இருங்க! தலைமைக்கழகம் அதிரடி
அண்ணாமலையின் அதிரடி அரசியல்
இதனையடுத்து ஆந்திரா, தெலங்கானா என தங்கள் பார்வையை விரித்த பாஜக தற்போது தமிழகத்தில் மீது அதிக முக்கியத்துவத்தை கொடுத்துள்ளது. இதற்காக தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையை நியமித்தது. அண்ணாமலையும் அதிரடி அரசியலை கையில் எடுத்தார். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். என் மண் என் மக்கள் என்கிற பாத யாத்திரையை நடத்தி அசத்தினார். கிராமங்களில் கூட பாஜகவின் கொடி ஏற்றப்பட்டது. திமுக- அதிமுகவிற்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். முதலமைச்சர் முதல் எதிர்கட்சி தலைவர் வரை வருவரையும் விடாமல் விளாசினார். இந்த அசூர வளர்ச்சியால் பாஜகவின் வாக்கு சதவிகிதம் அதிகரித்ததாக கூறப்பட்டது.
படிப்பதற்காக லண்டன் பயணம்
ஆனால் உள்ளாட்சி தேர்தல், சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்தது. இந்த நிலையில் தான் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் சார்ந்த படிப்பு படிப்பதற்காக லண்டன் செல்ல திட்டமிட்டார். இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 'சர்வதேச அரசியல்' என்ற தலைப்பில் ஆண்டு தோறும் சான்றிதழ் படிப்பிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேர்வானார். இதனையடுத்து இந்த படிப்பிற்காக கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி லண்டன் சென்றார். சுமார் 4 மாதங்கள் லண்டனில் தங்கி படிக்க வேண்டும் என கூறப்பட்டது.
பொறுப்பு குழு நியமனம்
எனவே தமிழக பாஜக தலைவராக வேறு ஒருவர் நியமிக்கப்பட இருப்பதாக தகவலை வெளியானது. ஆனால் அண்ணாமலை மீது தேசிய தலைமை வைத்த நம்பிக்கை காரணமாக அண்ணாமலையை மாற்ற எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதே நேரத்தில் தமிழகத்தில் பாஜக பொறுப்பு குழு நியமிக்கப்பட்டது. பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தலைமையில் அந்த குழுவானது செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் அண்ணாமலையின் வெளிநாடு பயணத்தின் காரணமாக தமிழக அரசியல் அமைதியாக காணப்படுகிறது.
தமிழக திரும்பும் அண்ணாமலை
எனவே அண்ணாமலை மீண்டும் தமிழகம் திரும்புவார் என பாஜகவில் உள்ள அண்ணாமலை ஆதரவாளர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு தற்போது குட் நியூஸ் ஒன்று வெளியாகியுள்ளது. அதன் படி லண்டன் சென்ற அண்ணாமலை ஜனவரி மாதம் வரை அங்கேயே தங்கி படிப்பார் என கூறப்பட்டது. ஆனால் நவம்பர் 23ஆம் தேதி அண்ணாமலை தமிழகம் திருப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இன்னும் ஒரு மாத காலத்தில் அண்ணாமலையில் அதிரடி அரசியல் தொடங்கப்படவுள்ளது.