தமிழகம் முழுவதும் 34,790 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மூலமாக மத்திய, மாநில அரசின் பங்கீட்டில் பொதுமக்களுக்கு இலவசமாக அரிசி, மானிய விலையில் பருப்பு, பாமாயில், சர்க்கரை, மண்ணெண்னை உள்ளிட்ட உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் ரேஷன் கடைகளில் விற்பனையாளர், கட்டுநர்கள் இல்லாததால் பல பகுதிகளில் ரேஷன் கடைகள் முழுவதுமாக செயல்படுவதால் தடங்கள் ஏற்பட்டது.
ration shop
இதனால் முறையாக பொருட்கள் வாங்க முடியாமல் பொதுமக்கள் சிரமமடைந்தனர். தொடர்ந்து இது தொடர்பான புகார்கள், குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வு கிடையாது: மாதம் ரூ.2 லட்சம் சம்பளத்தில் ரயலி்வேயில் வேலை வாய்ப்பு
ration shop
எழுத்து தேர்வு இல்லாமல் நேரடி நியமனம் மூலம் மாவட்ட வாரியாக பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் தமிழ் மொழியில் எழுத, படிக்க போதுமான திறன் பெற்றிருக்க வேண்டும். பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள கூட்டுறவுத் துறையின் ஆள் சேர்ப்பு நிலையங்கள் மூலம் நேர்காணலில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ration Shop
இப்பணிக்கு விண்ணப்பிக்க வருகின்ற நவம்பர் 7ம் தேதி கடைசி நாளாகும். அதன்படி 7ம் தேதி மாலை 5.45 மணி வரை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்களின் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்களைப் பொறுத்தவரை விற்பனையாளர் பணியிடங்களுக்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், கட்டுநர் பணியிடத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நேர்முகத் தேர்வில் தகுதி பெறும் நபர்களுக்கு முதல் ஓராண்டுக்கு தொகுப்பு ஊதியமாக ரூ.6,250 வழங்கப்படும். ஓராண்டுக்கு பின்னர் ஊதிய விகிதம் ரூ.8,600 - 29,000 வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் இன்டர்ன்ஷிப் திட்டத்தில் மாதம் ரூ.5,500 கிடைக்கும்! இப்பவே அப்ளை பண்ணுங்க!
பணியாளர் தேர்வின் போது அரசின் அனைத்து இடஒதுக்கீடு முறையும் முயைாக பின்பற்றப்படும் என்றும், 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் அந்தந்த மாவட்ட இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.