TN Government employees: அரசு ஊழியர்கள் கவனத்திற்கு! வெளியான முக்கிய அறிவிப்பு! இல்லைனா நடவடிக்கை தான்!

First Published | Oct 13, 2024, 9:22 PM IST

TN Government employees: தமிழகத்தில் அரசு ஊழியர்கள் பணியின்போது புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழிகள் பணியாற்றி வருகின்றனர். அவ்வப்போது பல்வேறு புது திட்டங்களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. குறிப்பாக அரசின் பல்வேறு பணிகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருகிறது. 

இதையும் படிங்க: TN Government Employee: தமிழக அரசின் புதிய உத்தரவு! முடியவே முடியாது! எதிர்க்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்!

இந்நிலையில் அரசு ஊழியர்கள் வேலை செய்யும் நேரத்தில் தங்கள் அடையாள அட்டை கட்டாயம் அணிய வேண்டும் என்பது ஏற்கனவே தமிழக அரசின் அடிப்படை விதிமுறைகளில் உள்ளது. இருப்பினும் அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுப் பணிகளில் உள்ள ஊழியர்கள் யாரும் தங்களது அடையாள அட்டையை முறையாக அணிவதில்லை.

Tap to resize

முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் மட்டுமே அரசு ஊழியர்கள், அதிகாரிகள் அடையாள அட்டையை அணிகின்றனர். அரசு ஊழியர்கள் அனைவரும் அலுவலக நேரத்தில் தவறாமல் புகைப்பட  அடையாள அட்டையை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்துத் துறைகளின் உயரதிகாரிகளுக்கு அரசு அவ்வப்போது ஆணைகள் அறிவுறுத்தங்களைப் பிறப்பித்து வருகிறது. 

இதையும் படிங்க:  Government Employee Diwali Bonus: தீபாவளி போனஸ்! அரசு ஊழியர்களின் வங்கி கணக்கில் எப்போது வரவு? வெளியான தகவல்!

ஆனால் இதை சரிவர பின்பற்றுவதில்லை. இந்நிலையில் தான் பணியின்போது தமிழக அரசு ஊழியர்கள் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயம் அணிய வேண்டும் என்று அதிரடியாக உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:Heavy Rain in Chennai: அதி கனமழை எச்சரிக்கை! சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா?

இதுதொடர்பாக தமிழக மனிதவள மேலாண்மை துறை சார்பில்:  அனைத்துத் துறைத் தலைவர்கள் மாவட்ட ஆட்சியர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள கீழ்நிலை அலுவலகங்களுக்கு அரசு ஆணைகள் அறிவுறுத்தங்களின்படி , பணியாளர்கள் , புகைப்பட அடையாள அட்டையைத் தவறாமல் அணியுமாறு அறிவுறுத்தியும் அவ்வாறு புகைப்பட அடையாள அட்டைகளை அணியாதவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest Videos

click me!