தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் குறித்த அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி உற்பத்தித்துறை, வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு, பொறியியல், மருந்துகள், ஆடைகள், தோல் பொருட்கள், தொழில்நுட்பம், சேவை போன்ற அனைத்து முக்கிய துறைகளிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலங்களுள் குறிப்பாக தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மற்றும் தொழிற்சாலை ஊழியர்களின் எண்ணிக்கையிலும் முன்னிலை மாநிலமாக திகழ்கிறது.
திருத்தப்பட்ட போனஸ் சட்டம் 2015ன் படி, மிகை ஊதியம் பெறத் தகுதியான சம்பள உச்சவரம்பு ரூ.21,000 எனவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி மிகை ஊதியம் கணக்கிட இருந்த மாதாந்திர சம்பள உச்சவரம்பு ரூ.7,000 ஆகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி மாதாந்திர சம்பள உச்சவரம்பான ரூ.21,000 என்பதை தளர்த்தி அனைத்து சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு 2023 - 24ம் ஆண்டுக்கான மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையினை கீழ்க்கண்டவாறு வழங்கப்படும்.
இதேபோல், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 விழுக்காடு 3 சதவீதம் போனஸ் வழங்கப்படும். இது தவிர தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3 ஆயிரம் கருணைத் தொகையாக வழங்கப்படும். இதனால் மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் ரூ.8,400ம் அதிகபட்சமாக ரூ.16,800ம் பெறுவர்.
மொத்தத்தில், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் 2 லட்சத்து 75 ஆயிரத்து 670 தொழிலாளர்களுக்கு 369 கோடியே 65 லட்சம் ரூபாய் மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகையாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனஸ் தொகை ஊழியர்களுக்கு எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த போனஸ் தொகை இந்த வாரம் ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.