Heavy Rain in Chennai: அதி கனமழை எச்சரிக்கை! சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா?

First Published | Oct 13, 2024, 5:59 PM IST

Red Alert for Chennai Tiruvallur Chengalpattu: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Heavy Rain

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பகல் மற்றும் இரவு நேரங்களில் சென்னை, மதுரை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் எப்போது மழை பெய்யும் மற்றும் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்குகிறது உள்ளிட்ட விவரங்களை வானிலை மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். 

Meteorological Department

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன்: கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும் தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. 7 இடங்களில் மிக கன மழையும், 29 இடங்களில் கன மழையும் பெய்துள்ளதாக தெரிவித்தார். மத்திய கிழக்கு அரபிக்கடல் அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதியில் வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுவதாகவும், வங்க கடலை பொறுத்தவரை தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. 

இதையும் படிங்க: TNPSC: அதெல்லாம் வதந்தி! யாரும் நம்பாதீங்க! குரூப் 4 தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி கொடுத்த முக்கிய தகவல்!

Tap to resize

Northeast Monsoon

நாளை  தெற்கு வங்கக்கடலின்  மத்திய பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். தொடர்ந்து வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 15, 16 தேதிகலில் வட தமிழகம், புதுவை  மற்றும்  தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும். அடுத்த 5 தினங்களுக்கு தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் மழை தொடரும். தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து அடுத்த நான்கு தினங்களில்  விலகும் நிலையில், கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில், 15 - 16ம் தேதி வாக்கில் வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும். 

Red Alert

தெற்கு வங்கக்கடலின்  மத்திய பகுதியில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, 14ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக் கூடும் என தெரிவித்தார். 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களில் கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். மழை குறித்து தமிழக அரசுக்கு அனைத்து தகவல் மற்றும் தரவுகள் வழங்கி வருவதாகவும், பேரிடர் மேலாண்மை துறையுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: School Girls: இனி மாணவிகளிடம் யாரும் வாலாட்ட முடியாது! சூப்பர் பிளானோடு களமிறங்கிய தமிழக அரசு!

udhayanidhi stalin

வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்ததை அடுத்து தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழை நீர் தேங்கும் பகுதிகளில் இருந்து அவற்றை வெளியேற்றுவதற்கான வழிவகைகள் என்ன என்பது குறித்தும் துணை முதல்வர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

School Holiday

இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த 4 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும், மழையின் தன்மையை பொறுத்தே பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவெடுப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!